பிரேம்ஜிக்கும் இந்துவுக்கும் உள்ள வயது வித்தியாசம் இவ்வளவா?.. காதலுக்கு வயது ஒரு தடையே இல்லை
சென்னை: பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகருமான பிரேம்ஜி அமரனுக்கு சில நாட்களுக்கு முன்பு திருத்தணி முருகன் கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் அவர். ரொம்பவே சிம்பிளாக நடந்து முடிந்தது திருமணம். அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின. இந்தச் சூழலில் பிரேம்ஜிக்கும் இந்துவுக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவரும் இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, இளைய மகன் பிரேம்ஜி அமரன் ஆவர். இவர்கள் இருவரும் சினிமாவில்தான் இருக்கிறார்கள். வெங்கட் பிரபு நடிகராக அறிமுகமாகி இப்போது ஃபேமஸான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜய்யை வைத்து இப்போது GOAT படத்தை இயக்கியிருக்கிறார். படமானது செப்டம்பர் மாதம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரேம்ஜி அமரன்: பிரேம்ஜி அமரனும் சினிமாவில் ஃபேமஸான நடிகர்தான். சிம்புதான் பிரேம்ஜியை தனது வல்லவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். இருந்தாலும் அதற்கு முன்னதாகவே யுவன் ஷங்கர் ராஜாவின் சவுன்ட் இன்ஜினியராகவும், பாடகராகாவும்,இசையமைப்பாளராகவும் பிரேம்ஜி தொடர்ந்து சினிமாவில் இருந்தது கவனிக்கத்தக்கது. சில படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக பார்ட்டி படத்துக்கு இசையமைத்திருந்தார். ஆனால் படம் வெளியாகவில்லை.
நடிகராக அப்ளாஸ்: தனது முதல் படமான வல்லவன் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அவருக்கு, சென்னை 600028 திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களிலுமே இருந்தார். வெங்கட் பிரபு படங்கள் மட்டுமின்றி வேறு இயக்குநர்கள் படத்திலும் நடிக்க ஆரம்பித்தார் அவர். குறிப்பாக அவர் தனது கைகளை வைத்து செய்யும் ஒரு ஆக்ஷன் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்திருக்கிறது. அதுவே அவரது அடையாளமாகவும் இருக்கிறது.
திருமணம்: பிரேம்ஜி திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டால் நான் ஒரு முரட்டு சிங்கிள் என்று சொல்லி ஏதோ ஒரு காரணத்தை ஜாலியாக கூறிவிட்டு எஸ்கேப் ஆகிக்கொண்டே இருந்தார். சூழல் இப்படி இருக்க, பிரேம்ஜி திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று சமீபத்தில் வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி சில நாட்களுக்கு முன்பு திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடந்து முடிந்தது.
வயது வித்தியாசம்: இந்நிலையில் பிரேம்ஜி அமரனுக்கும், இந்துவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி பிரேம்ஜிக்கு வயது இப்போது 45 வயதாகும். இந்துவுக்கு 25 வயது என கூறப்படுகிறது. ஆக இருவருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பறந்துகொண்டிருக்கின்றன. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், காதலுக்கு வயதெல்லாம் ஒரு தடை இல்லை ப்பா என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். முன்னதாக இந்து சேலத்தை சேர்ந்தவர் என்றும்; அவர் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார் என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இருவரும் ஒரு சூழ்நிலையில் எதார்த்தமாக சந்தித்துக்கொண்டனர் அப்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாகவும் ஒரு தகவல் ஓடுவது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











