AK 62 அப்டேட் இன்னும் வராம இருக்க இதுதான் காரணம்... அஜித் இப்போ முடிவை மாத்திட்டார்!

சென்னை: அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க அஜித் கமிட் ஆகியுள்ளார்.

அதில், ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், தற்போது அவர் அந்த ப்ராஜக்ட்டில் இருந்து விலகிவிட்டார்.

அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்கலாம் என தகவல் வெளியாகி வரும் சூழலில், அஜித்தின் அப்பா சுப்ரமணியன் நேற்று காலமானார்.

ஏகே 62 லேட்டஸ்ட் அப்டேட்

ஏகே 62 லேட்டஸ்ட் அப்டேட்

பொங்கல் ஸ்பெஷலாக வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் ஏகே 62 படத்தை லைகா தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்குவார் என ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால், எதிர்பாராதவிதமாக ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கியது லைகா புரோடக்‌ஷன்ஸ். அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

ஆனாலும், இதுவரை ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விக்னேஷ் சிவனின் திரைக்கதையில் திருப்தி இல்லாமல் தான் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். அதனால் அதன்பின்னர் தான் மகிழ் திருமேனியும் இந்த ப்ராஜக்ட் உள்ளே வந்துள்ளார். முதலில் ஒன்லைன் கேட்ட அஜித் உடனே ஓக்கே சொன்னதாகவும், ஆனால், மொத்த ஸ்கிரிப்ட்டும் ரெடியானதும் அபிஸியலாக அறிவிக்கலாம் எனக் கூறிவிட்டாராம். லைகா தரப்பிலும் அதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டதாம்.

முடிவை மாற்றிய அஜித்

முடிவை மாற்றிய அஜித்

அதன்படி மார்ச் மாதத்திற்குள் ஏகே 62 கதையை முடித்துவிட்டு ஏப்ரலில் ஷூட்டிங் என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஏகே 62 படத்தை முடித்துவிட்டு உலகம் முழுவதும் பைக் டூர் செல்ல அஜித் ப்ளான் செய்திருந்ததார். அதனால் ஏகே 62 படப்பிடிப்பை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அஜித் மகிழ் திருமேனிக்கு கண்டீஷன் போட்டிருந்தாராம். ஆனால், எதிர்பாராதவிதமாக தனது தந்தை சுப்ரமணியன் இறந்துவிட்டதால், பைக் டூர் திட்டத்தை தள்ளி வைத்துவிட்டாராம் அஜித். அதனால் ஏகே 62 ஸ்கிரிப்ட் வேலைகளை இன்னும் பொறுமையாக பார்த்து வருகிறதாம் படக்குழு.

ஏப்ரலில் அபிஸியல் அப்டேட்

ஏப்ரலில் அபிஸியல் அப்டேட்

ஆனாலும், ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏப்ரல் மாதம் வெளியிட வேண்டும் என லைகா திட்டமிட்டுள்ளதாம். படப்பிடிப்பை அஜித் விரும்பும் தேதியில் ஆரம்பிக்கலாம் எனவும் லைகா கூறியுள்ளது. இருப்பினும் ஏகே 62 ஷூட்டிங் மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் தந்தை கடந்த 4 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து ஏகே 62 படத்தின் அப்டேட் முதல் ஷூட்டிங் வரை எல்லாமே மாற்றமாகியுள்ளதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X