Suriya 42 : சூர்யா 42 தரமான அப்டேட்..இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
சென்னை : சூர்யா நடிப்பில் உருவாகிவரும் சூர்யா 42 திரைப்படம் குறித்த தரமான அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு சூர்யாவின் மார்க்கெட் எங்கையோ சென்றுவிட்டது.
அதுவும் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் படத்திற்கு பிறகு சூர்யாவை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சூர்யா 42 : நடிகர் சூர்யாவின் 42வது படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு சூர்யா 42 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வருகிறது. தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
பாலிவுட் நாயகி : இப்படத்தின் தரமான போஸ்டரை அண்மையில் படக்குழு வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. பாலிவுட்டில் நாயகியாக வலம் வரும் திஷா பதானி இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். மேலும், மிருணால் தாக்கூர், யோகி பாபு ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர்.

இரண்டு பாகங்களாக : மிகப்பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி காலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யா 42 படத்தின் தலைப்பு கங்குவா என வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அது எந்த அளவுக்கு உண்மை என்று நாளை தெரிந்துவிடும்.
தரமான அறிவிப்பு : இந்த நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மண்டை ஓடு மற்றும் கத்தியுடன் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில், சூர்யா 42 திரைப்படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனமான saregama south கைப்பற்றி உள்ளது. 3டி டெக்னாலஜியில் உருவாகி வரும் இந்த படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வாடிவாசல் : இதையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்கரா படம், ஜெய் பீம் இயக்குனருடன் ஒரு படம் என அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துள்ளார் சூர்யா. சிறுத்தை சிவா படம் முடிந்ததும், சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் சூர்யா. இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஜூன் மாதம் தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் முடிவடையும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











