தியேட்டர்களை தெறிக்கவிட நாளை வருகிறான் பேட்மேன்.. ரஷ்யாவில் மட்டும் ரிலீஸ் இல்லையாம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தி பேட்மேன் திரைப்படம் மார்ச் 4ம் தேதி வெளியாகிறது.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இந்த படம் வெளியாகிறது.

ஏற்கனவே பேட்மேன் படத்தின் ப்ரீமியர் ஷோ காட்சியை பார்த்த சர்வதேச விமர்சகர்கள் படத்திற்கான விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

நாளை வருகிறான் பேட்மேன்

நாளை வருகிறான் பேட்மேன்

சினிமாவில் லாஜிக் எதிர்பார்க்கும் ரசிகர்களும் சூப்பர் ஹீரோ படங்கள் என்றால் வாய் பிளந்து அந்த மேஜிக்கை ரசித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், சூப்பர் ஹீரோ படம் என்றாலும், என்கேஜிங்காக இல்லை என்றால் அந்த படங்களையும் கழுவி ஊற்ற பெரிய கும்பலே காத்திருக்கிறது. வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள தி பேட்மேன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

பேட்மேன்கள்

பேட்மேன்கள்

1943ம் ஆண்டு லூயிஸ் ஜி வில்சன் பேட்மேனாக நடித்து அசத்தினார். அவரை தொடர்ந்து 1949ம் ஆண்டு ராபர்ட் லவுரி பேட்மேனாக நடித்தார். 1966 முதல் 1698 வரை வெளியான டிவி தொடரில் ஆதம் வெஸ்ட் பேட்மேனாக நடித்திருந்தார். 1989 முதல் 1992 வரை மைக்கேல் கீட்டன் பேட்மேனாக கோதம் சிட்டியை காவல் காத்தார். 1995ம் ஆண்டு வால் கில்மர் பேட்மேன் உடையை அணிந்தார்.

புதிய பேட்மேன்

புதிய பேட்மேன்

1997ம் ஆண்டு ஜார்ஜ் க்ளூனியும் 2002ம் ஆண்டு ப்ரூஸ் தாமஸும் பேட்மேனாக நடித்தனர். 2005 முதல் 2010 வரை கிறிஸ்டியன் பேல் பேட்மேனாக நடித்து அந்த கதாபாத்திரத்தை உலகளவில் பிரபலமாக்கினார். அதன் பின்னர் பென் அஃப்லெக் பேட்மேனாக நடித்தார். இந்நிலையில், 2022ல் புதிய பேட்மேனாக ராபர்ட் பேட்டின்சன் உதயமாகி உள்ளார்.

நாளை ரிலீஸ்

நாளை ரிலீஸ்

மார்ச் 4ம் தேதி உலகம் முழுவதும் தி பேட்மேன் திரைப்படம் வெளியாகிறது. ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடித்துள்ள திரைப்படத்தின் ப்ரீமியர் அமெரிக்காவில் நடைபெற்ற நிலையில், பேட்மேனும் கேட் உமனும் கவர்ச்சிகரமாக உடையணிந்து வந்து ரசிகர்களை கவர்ந்தனர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை இந்தியாவிலும் இந்த படம் திரையரங்குகளை தெறிக்கவிட காத்திருக்கிறது.

ரஷ்யாவில் இல்லை

ரஷ்யாவில் இல்லை

உக்ரைன் மீது கடந்த 6 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், தி பேட்மேன் திரைப்படத்தை ரஷ்யாவில் தற்காலிகமாக வெளியிடப் போவதில்லை என வார்னர் பிரதர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ரஷ்ய ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். தி பேட்மேன் திரைப்படம் ரஷ்யாவில் வெளியாகாது என்கிற முடிவுக்கு சர்வதேச ரசிகர்கள் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X