சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவி ‘தி பெட்‘…பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது !
சென்னை : தி பெட் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.
மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தி பெட்
ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தி பெட். வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி. ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும் அதைத் தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை.

போலீஸ் அதிகாரியாக
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டாடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்த ஜான் விஜய் இத்திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜான் விஜய், ரிஷா இருவரும் துணிச்சலாக சில நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளனர்.

அர்ப்பணிப்பு உணர்வுடன்
டார்லிங் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சிருஷ்டி டாங்கேவுக்கு பெயர் சொல்லும் வகையில் எந்த திரைப்படமும் இதுவரை வெளியாகவில்லை. இத்திரைப்படத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். இப்படம் நிச்சயம் அவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

பர்ஸ்ட் லுக்
இந்நிலையில் தி பெட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் சிருஷ்டி டாங்கேவுக்கு ஸ்ரீகாந்த் முத்தம் கொடுப்பது போல உள்ளது. மேலும், ஜான் விஜய்யும் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளார். வித்தியாசமான தலைப்பை கொண்ட இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











