கிண்டல் என்ற பெயரில் டார்ச்சர் செய்த ஜான் விஜய்… சிருஷ்டி டாங்கே பேச்சு !

சென்னை : ஸ்ரீநிதி புரோடக்ஷன்ஸ் சார்பில் விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் தயாரிக்க, மணிபாரதி இயக்கத்தில், ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே ஜோடியாக நடித்துள்ள படம் தி பெட்.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இதில் ஶ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, இயக்குனர் மணிபாரதி, தயாரிப்பாளர் விஜயகுமார் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த, விழாவில் பேசிய, சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய் கிண்டல் என்ற பெயரில் என்னை டார்ச்சர் செய்தார் என்று கூறியுள்ளார்.

தி பேட்

தி பேட்

தி பேட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதில், காவல்துறை அதிகாரியாக ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், பிளாக் பாண்டி, தேவிப்ரியா, திவ்யா உள்ளிட்ட பலர் தோன்றுகின்றனர்.

கதை பிடித்திருந்தது

கதை பிடித்திருந்தது

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய , சிருஷ்டி டாங்கே, படத்தின் டீசர் பிடித்திருக்கும் என்று நான் நம்புறேன். இயக்குனர் இந்த கதையை சொன்னதும் எனக்கு பிடித்துவிட்டது. இதற்கு முன்பு இந்த மாதிரி ஒரு கதையில் நான் நடித்தது இல்லை. என்னை நம்பி இந்த கேரக்டரை எனக்கு கொடுத்த இயக்குனருக்கு நன்றி என்றார்.

செம டார்ச்சர்

செம டார்ச்சர்

தி பெட் திரைப்படத்தில் நடித்துள்ள ஜான் விஜய் எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அனைவரையும் ஏதாவது பேசி கலாய்த்து கொண்டேஇருப்பார். ஜான் விஜய் கிண்டல் என்ற பெயரில் டார்ச்சர் செய்துள்ளார். இதனால் பதிலுக்கு நானும், ஜான் விஜய்யை அதிகமாக கலாய்த்து இருக்கிறேன். ஒரு பொண்ணு இப்படி கலாய்க்குதே என்று பயந்து ஜான் விஜய் என் பக்கமே வரமாட்டார் என்றார்.

Recommended Video

SHRUSTI DANGE CONTROVERSIAL INTERVIEW | RAJAVUKKU CHECK MOVIE | FILMIBEAT TAMIL
குளிர் ஜுரம்

குளிர் ஜுரம்

குளிரில் நடுங்கிக்கொண்டே தான் நடித்தேன். குளிர் ஜுரம் கூட வந்துவிட்டது. ஸ்ரீகாந்த்தான் அந்த நேரத்தில் உதவி செய்தார். காட்சிகளில் எளிதாக நடிக்க உதவினார் என்று நன்றியுடன் தெரிவித்தார். ஜான் விஜய் குறித்து திரைத்துறையில் அனைவருக்கும் தெரியும். படப்பிடிப்பில் அனைவரையும் கலாய்ப்பவர். குறிப்பாக நடிகைகளை. "ஆனால் நான் திருப்பிக் அவரை கலாய்த்ததால் இந்தப் பெண்ணிடம் மட்டும் எதுவும் வைக்கக் கூடாது என்று அவர் திரும்பி ஓடி விட்டார் என சிருஷ்டி டாங்கே கூறினார். இந்தத் திரைப்படம் ரசிகர்களை கவரும் வகையில் நன்றாக வந்துள்ளது, இப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X