twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடும்ப உறவை குழிதோண்டி புதைக்கும் கள்ள உறவை கூறும் தி பெட்டர் ஹாஃப்

    |

    சென்னை: நவநாகரீகம் என்ற பெயரில் பலரும் இது போன்ற உறவுகளில் ஈடுபடுவது மிகவும் ஆச்சரியமாகவும், நமது கலாச்சாரத்தை கெடுக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது தி பெட்டர் ஹாஃப் மியூசிக்கல் குறும்படம் ஒரு நல்ல படைப்பாக அமைந்திருக்கிறது. தி பெட்டர் ஹாஃப் திரைப்படம் இன்று சமூகத்தில் நடைபெறும் பிரச்சனையை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளது. இன்றைய சமூகத்திற்கும் தலைமுறையினருக்கும் இது மிகவும் முக்கியமான ஒரு கதை.

    இந்த உலகம் கொஞ்சம் கொஞ்சமாக கார்ப்பரேட் உலகமாக மாறி வருகிறது. தமிழர்களுக்கு என்று ஒரு பாரம்பரியமான கலாச்சாரம் ஒன்று உள்ளது. வெளிநாட்டவர்கள் கூட, இந்தியர்களின் பழக்க வழக்கங்களையும், கலாச்சாரத்தையும் பார்த்து வியந்து வாய்பிளந்து நிற்கின்றனர். ஆனால், நாமோ கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கர்களின் கலாச்சாரத்திற்கு மாறி வருகிறோம்.

    The Better Half is a film that points to todays abusive relationships

    இதனால், நவநாகரீகம் என்ற பெயரில் முறைகேடான உறவுகளும், தகாத பழக்க வழக்கங்களும் பெருகி வருகின்றன. இதை அழகாவும் தெளிவாகவும் எடுத்துக் கூறியுள்ளது சமீபத்தில் வெளியாகியுள்ள தி பெட்டர் ஹாஃப் என்ற மியூசிகல் குறும்படம். இது எந்த மொழிப்படமும் இல்லை. வெறும் மியூசிக்கல் படம் மட்டுமே.

    இப்படம் சமூக வலைதளங்களிலும், மலையாள திரையுலகிலும் நேர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ளது. அபிலாஷ் புருஷோத்தமன் எழுத்தில் விஷ்ணு முரளிதரன் இயக்கியுள்ள இக்குறும்படத்திற்கு லுலு அம்பலக்குன்னு மற்றும் பிரசாந்த் தீப்பு ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

    The Better Half is a film that points to todays abusive relationships

    வெயில் படம் மூலம் அறிமுகமான பிரியங்கா, இப்படத்தில் அனீஷ் ரஹ்மான், பிஜே மற்றும் அபிலாஷ் பி.என் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். வெறும் மியூசிகல் திரைப்படம் என்பதால், தங்களது உணர்ச்சிகரமான நடிப்பின் மூலமே தங்களது நடிப்புத் திறமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.

    இந்த திரைப்படத்தில் ஒரு கணவன் மனைவியையும், ஒரு மனைவி கணவனையும் கொலை செய்வது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது ஒரு வித்தியாசமான திரைப்படமாகவும், ஒரு கேள்விக்குறியோடும் உள்ளது. அதாவது கொல்லப்படும் இருவரும் தகாத உறவு வைத்திருந்ததால் கொல்லப்படுகிறார்களா, அல்லது கொலை செய்பவர்கள் இருவரும் தகாத உறவில் ஈடுபட்டு இருப்பதால் அவரவர் கணவனையும், மனைவியையும் கொன்று விடுகிறார்களா என்பதை ஒரு கேள்விக்குறியோடு படத்தை நகர்த்திருக்கிறார் இயக்குநர்.

    இன்று பெரும்பாலான சீரியல்களில், நாம் முறைகேடான உறவுகள், தகாத உறவுகள், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்கி பார்வையாளர்களை அலுப்பு தட்ட வைக்கிறது. இது சீரியல்களில் மட்டும் மிகைப்படுத்தி காட்டுகிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையிலேயே தினம் தினம் நாம் செய்தித் தாள்களிலும், செய்திகளிலும் ஏன் சில சமயங்களில் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களாகவும் இருக்கின்றன.

    The Better Half is a film that points to todays abusive relationships

    இன்று மனைவிக்கு தெரியாமல் கணவனும், கணவனுக்கு தெரியாமல் மனைவியும் கள்ளக்காதல், தகாத உறவு வைத்துக்கொள்வது என பல அசிங்கங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. இது காலம் காலமாக நடைபெற்று வந்தாலும் அதை மிகவும் நுணுக்கமாகவும், வித்தியாசமான கதை அம்சங்களுடன் வெளிப்படுத்தி அது போன்ற படங்களை வெற்றிப்படமாக வழங்கியதில் பெரும் பங்கு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரையே சேரும். அவரின் அபூர்வ ரகங்கள், வானமே எல்லை, புதுப்புது அர்த்தங்கள், கல்கி உள்ளிட்ட திரைப்படங்கள் சிறப்பான எடுத்துக்காட்டுகள்.

    அவரை தொடர்ந்து பல இயக்குநர்களும், ஆண் பெண் முறைகேடான உறவுகள் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் வைத்து பல படங்களை முயற்சித்துள்ளனர். இன்று சீரியல் இயக்குபவர்கள் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு மிகவும் கொச்சைப்படுத்தி அந்த சீரியல் பார்ப்பவர்களையே முகம் சுளித்து எரிச்சல் அடைய வைக்கிறார்கள்.

    ஆனால் இந்த தி பெட்டர் ஹாஃப் திரைப்படம் இன்று சமூகத்தில் நடைபெறும் பிரச்சனையை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளது. இது போலவே தமிழில் 2014ஆம் ஆண்டில் அதிதி என்ற படம் பரதன் இயக்கத்தில் வெளியானது. இது மலையாளத்தில் வெளியான காக்டெயில் திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமாகும்.

    மலரும் முன்னே கசங்கிப் போன பிஞ்சு மொட்டு.. சுஜித் மரணத்தால் கலங்கும் தமிழ் திரையுலகம்!மலரும் முன்னே கசங்கிப் போன பிஞ்சு மொட்டு.. சுஜித் மரணத்தால் கலங்கும் தமிழ் திரையுலகம்!

    நடிகர் நந்தா, அனன்யா, நிகேஷ் ராம் நடிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் போது மக்களால் பார்க்கப்படுகிறது. இப்படத்தில் கணவன், மனைவி இருவரும் தகாத உறவுகளில் ஈடுபடுவது போன்ற ஒரு கதைக்களம். நந்தா மிகச் சிறப்பாக இப்படத்தில் நடித்திருந்தார்.

    இன்றைய சமூகத்திற்கும் தலைமுறையினருக்கும் இது மிகவும் முக்கியமான ஒரு கதை. நவநாகரீகம் என்ற பெயரில் பலரும் இது போன்ற உறவுகளில் ஈடுபடுவது மிகவும் ஆச்சரியமாகவும், நமது கலாச்சாரத்தை கெடுக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் இந்த மியூசிக்கல் கூறும் படம் ஒரு நல்ல படைப்பாக அமைந்திருக்கிறது. இன்றைய சூழ்நிலையை மிகச் சிறப்பாக வெளிக்காட்டிய இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

    வெயில் புகழ் பிரியங்கா வெகு சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்திற்கு முன்னர் மலையாளத்தில் மாஸ்க் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழில் பிரியங்கா உற்றான் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மூலம் அவர் திரும்பவும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    The Better Half is one of the most beautifully expressed issues in society today. This is a very important story for today's community and for generations.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X