பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி.. காருக்கு மாறிய விஜய்.. வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து!
சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் முதன் முறையாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்காக இன்று பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுவைத்தாக்கல் செய்த விஜய், தான் போட்டியிடும் பெரம்பூரில் பிரச்சாரம் செய்தார். அதைத்தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விஜய் பேச்சு: பெரம்பூரில் பிரச்சாரம் செய்த விஜய், போதைப் பொருள் புழக்கம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஊழல் தலைவிரித்து ஆட ஒன்றுக்கும் உதவாத திமுக ஆட்சிதான் காரணம். இப்படிப்பட்ட ஆட்சி நடத்திய ஸ்டாலின் இத்தேர்தலோடு விடைபெறப் போகிறார். ஐந்து வருடத்தில் ஆட்சி செய்தார்களா? இல்லை வேறு ஏதாவது செய்தார்களா? பெண்கள் வெளியில் வரவே முடியவில்லை. வெளியில் சென்றால் என்ன நடந்து விடுமோ? எது நடந்து விடுமோ? என்கிற பயம் வருகிறது. பாட்டி வயதுடையவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. டீக்கடையில் நிம்மதியாக டீ கூட குடிக்க முடியல, போதையை போட்டுக்கொண்டு அங்கு வந்து வெட்டுகிறார்கள். இது என்ன நாடா? இல்லை காடா? இந்த திமுக அரசுக்கு வேட்டுவைக்க வேண்டும் என்று பெரம்பூரில் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரம் திடீர் ரத்து: அதைத்தொடர்ந்து கொளத்தூரில் பிரச்சாரம் செய்த விஜய் அடுத்ததாக ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய சென்று கொண்டு இருந்த நிலையில், திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து காருக்கு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. விஜய் கொளத்தூரில் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கும் போதே, தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், விஜய் பிரச்சார வாகனத்தை சுற்றி மக்கள் சூழ்ந்து கொண்டு இருப்பதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும். போலீசார் உரிய பாதுகாப்பை அளிக்கவில்லை என்றும், உரிய பாதுகாப்பை அளிக்குமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தமிழக வெற்றிக்கழகம் புகார் அனு ஒன்றை அனுப்பி உள்ளது.
காரணம்: இதன் காரணமா கௌத்தூரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வில்லிவாக்கம் சென்று கொண்டு இருந்த விஜய் பாதியிலேயே பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி காரில் ஏறி சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











