விஜயின் ஜனநாயகன் படத்திற்கு அடுத்த சிக்கல்.. தேர்தல் ஆணையம் என்ன செய்ய போகுதோ?

சென்னை: விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கை குழு பார்த்து முடித்தவுடன் சில மாற்றங்களை செய்து படத்தை எப்படியாவது வெளியிடலாம் என தயாரிப்பு நிறுவனம் நினைத்து இருந்த நிலையில், ஜனநாயகன் படத்திற்கு அடுத்து ஒரு பெரிய சிக்கல் வந்துள்ளது.

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள தளபதி விஜய், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக விஜய் இனி அரசியல் தான் எல்லாம் என சொல்லி சினிமாவிற்கு முழுக்கு போட உள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் கடைசி திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படம் ஜனவரி 9ம் தேதி வெளியாக இருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Jana Nayagan vijay censor
Photo Credit:

ஜனநாயகன் பிரச்சனை: நீண்ட போராட்டத்திற்கு பின் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. நேற்று மறு தணிக்கை குழு மும்பையில் படத்தை பார்த்தனர். படத்தை பார்த்துவிட்டு சில மாற்றங்களை பரிந்துரை செய்வார்கள், அதை செய்து சென்சார் சான்றிதழை வாங்கிவிடலாம் என காத்திருந்த ஜனநாயகன் படக்குழுவிற்கு அடுத்த சிக்கல் வந்துள்ளது. அதாவது படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள், வசனங்கள் அதிக அளவில் இருப்பதால், தேர்தல் ஆணையம் படத்தை பார்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருமா வராதா?: தேர்தல் ஆணையம் படத்தை பார்த்துவிட்டு, தடையில்லா சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே சென்சார் சான்றிதழ் கிடைக்கும். ஏப்ரல் 23ந் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், ஜனநாயகன் படத்திற்கு நாங்கள் நேரடியாக சென்சார் சான்றிதழ் கொடுக்க முடியாது என தணிக்கை குழு இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தணிக்கை குழு சான்றிதழ் கிடைத்ததும் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில், ஜனநாயகன் படம் மேலும் ஒரு சிக்கலில் சிக்க உள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X