ரைசா வில்சனின் "தி சேஸ்" ட்ரைலர் அவுட்!
சென்னை: ரைசா வில்சன் நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள படம் தான் "தி சேஸ்".
இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்கியுள்ளார், சாம் C.S. இசையமைத்துள்ளார், ராஜசேகர் வர்மா தயாரித்துள்ளார்.
"தி சேஸ்" படக்குழு படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது. ட்ரைலர் தற்போது யூ டியூபில் வைரலாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

வேலையில்லா பட்டதாரி 2
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ரைசா அறிமுகமானார். அதன் மூலம் பிரபலமாக தனுஷின் வேலையில்லா பட்டதாரி - 2 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ரசிகர்கள் வரவேற்பு
அதையடுத்து ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். இளம் ரசிகர்களை இந்த படத்தின் மூலம் கவர்ந்து நல்ல வரவேற்பும் பெற்றார். பின்னர் பாலாவின் வர்மா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஆக்ஷன் த்ரில்லர்
பின்னர் ரைசா நடிப்பில் படங்கள் ஏதும் வெளிவராமல் இருந்த நிலையில் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரபல இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லரான "தி சேஸ்" படத்தில் நடிக்க கமிட் ஆகினார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இதைத்தொடர்ந்து நேற்று இரவு வெளியான "தி சேஸ்" படத்தின் ட்ரைலர் பரபரப்பான காட்சிகளை கொண்டு
சாம் C.S. ன் மிரட்டலான பின்னணி இசையுடன் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ரசிகர்கள் பலரும் வியந்து பாராட்டிய வண்ணம் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











