கைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!

Recommended Video

BREAK புடிக்காத LORRY ய ஓட்ட சொன்னாங்க | ACTOR KARTHI | KAITHI PRESS MEET | FILMIBEAT TAMIL

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவரவுள்ள கைதி திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. ஒரு இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வரும் தீபாவளி நாளான்று திரைக்கு வர உள்ளது.

The chennai High Court banned the release of kaithi movie on websites

இந்நிலையில் இப்படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம் சட்டவிரோதமான இணையதளங்களில் படத்தை வெளியிட்டால் தங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் எனவே இந்த படத்தை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட கூடாது எனவும் வாதத்தை எடுத்து வைத்தார்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், 1,620 சட்டவிரோத இணையதளங்களில் கைதி திரைப்படத்தை வெளியிட தடைவிதித்து இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X