சொகுசு காருக்கான வரி பாக்கியை செலுத்த நடிகர் தனுஷுக்கு 48 மணி நேரம் கெடு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!

சென்னை: சொகுசு காருக்கான மீதமுள்ள வரியை செலுத்த நடிகர் தனுஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளது.

Recommended Video

Dhanush -யை வெச்சி செய்த நீதிபதி 2 நாளில் 30 லட்சம் கட்டுங்க! | Thalapathy Vijay, Rolls Royce

கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

காரை பதிவு செய்ய உத்தரவு

காரை பதிவு செய்ய உத்தரவு

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்ப்பட்டதை அடுத்து, விதிகளை பின்பற்றி காரை பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.

மீதமுள்ள வரியை செலுத்த தயார்

மீதமுள்ள வரியை செலுத்த தயார்

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்துவைக்கும்படி கோரிக்கை வைத்தார். வழக்கை வாபஸ் பெறவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.

தொழிலை மறைத்தது ஏன்?

தொழிலை மறைத்தது ஏன்?

அப்போது குறுக்கிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நடிகர் தனுஷுக்கு எதிராக சரமாரி கேள்விகளை எழுப்பினார். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறீர்கள் என குறிப்பிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மறைத்ததற்கு விளக்கம் வேண்டும்

மறைத்ததற்கு விளக்கம் வேண்டும்

என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார் என விளக்கமளித்து மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, பணியையோ அல்லது தொழிலையோ வழக்கு மனுவில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா என்றும் வினவினார்.

வாபஸ் பெற அனுமதிக்க முடியாது

வாபஸ் பெற அனுமதிக்க முடியாது

2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, வரியை செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே எனவும், அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை வரி செலுத்தாத நிலையில் வாபஸ் பெற அனுமதிக்க முடியாது எனவும் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலை

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலை

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டிதானே எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

சோப்பு வாங்கும் சாமானியர்..

சோப்பு வாங்கும் சாமானியர்..

ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் பால்காரர், சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை நடுத்தர மக்கள் கூட வரி செலுத்திதானே பயன்படுத்துகிறார்கள் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். பெட்ரோலில் ஜி.எஸ்.டி. கட்ட முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை

அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை


உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள் என குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள் என இ

அறிவுறுத்தினார். எந்த தனிப்பட்ட ஒருவரையும் குற்றம்சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல என்றும், அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் படி நடக்கும்படி அறிவுறுத்தினார்.

பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு

பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு

நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாக கணக்கிட்டு மதியம் 2:15க்கு தெரிவிக்க வேண்டும் எனவும், கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை இறுதி உத்தரவிற்காக மதியம் ஒத்தி வைத்தார் நீதிபதி சுப்பிரமணியம்

வணிக வரித்துறை தரப்பில் விளக்கம்

வணிக வரித்துறை தரப்பில் விளக்கம்

இந்நிலையில் இன்று பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நுழைவு வரியில் ரூ. 3030357 லட்ச ரூபாய் தனுஷ் செலுத்த வேண்டிய பாக்கி உள்ளதாக வணிக வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தனுஷுக்கு 48 மணி நேரம் கெடு

தனுஷுக்கு 48 மணி நேரம் கெடு

அப்போது தனுஷ் தரப்பில், கொரோனா காலம் என்பதால் திங்கட்கிழமைக்குள் இந்த தொகையை செலுத்தி விடுவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மின்னணு பரிவர்த்தனையிலேயே நிலுவை வரியை செலுத்தபோவதால் 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென கெடு விதித்து உத்தரவிட்டார்.

இதுபோன்ற வழக்குகள் மேலும் சுமைதான்

இதுபோன்ற வழக்குகள் மேலும் சுமைதான்

மேலும் வழக்கை வாபஸ் பெறும் தனுஷின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை முடித்து வைத்தார். தொடர்ந்து பேசிய நீதிபதி நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் குவிந்துள்ள நிலையில் இதுபோன்ற தேவையற்ற வழக்குகள் மேலும் சுமைதான் என்றார்.

தனுஷ் வழக்கு முடித்து வைப்பு

தனுஷ் வழக்கு முடித்து வைப்பு


மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்யும்போது மனுவில் குறிப்பிட வேண்டிய தகவல்கள் இல்லை என்றால் அதை ஏற்க கூடாது என்ற விதிகளை பின்பற்றாத பதிவுத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தலைமை பதிவாளருக்கும் உத்தரவிட்ட நீதிபதி சுப்பிரமணியம் வழக்கை முடித்து வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X