Don't Miss!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கனும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பொங்கல் ரேஸில் உக்கிரமான வாரிசு, துணிவு… பஞ்சாயத்தை கூட்டிய விஜய், அஜித் ரசிகர்கள்!
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாகின்றன.
8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - அஜித் படங்கள் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் கோலிவுட்டே பரபரப்பாக காணப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு கிட்டத்தட்ட 40 நாட்களே உள்ள நிலையில், விஜய் - அஜித் ரசிகர்கள் இப்போதே பேனர் வைப்பதில் போட்டியிட்டு மோதி வருகின்றனர்.
50 வயதில் மணிரத்னம் பட நடிகை கர்ப்பமா? துணிவு தயாரிப்பாளர் வீட்டில் வாரிசு வரப்போகுதா? உண்மை என்ன?
பொங்கல் ரேஸில் வாரிசு - துணிவு
விஜய்யின் வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு படங்கள் பொங்கலுக்கு வெளியாகவுள்ளன. வாரிசு ரிலீஸாவதில் சிக்கல்கள் இருந்த நிலையில், தற்போது அந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிட்டன. இதனால், பொங்கல் ரேஸில் விஜய்யும் அஜித்தும் நேருக்கு நேர் மோதவுள்ளது உறுதியாகியுள்ளது. அஜித்தின் துணிவு படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் வெளியிட, வாரிசு வெளியீட்டு உரிமையை 7 ஸ்கீரின்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இரண்டு தரப்பில் இருந்தும் இப்போதே ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கிவிட்டன.
பேனர் வைக்கும் ரசிகர்கள்
யார் வெயிட் என்ற போட்டியை காட்ட விஜய் - அஜித் ரசிகர்களும் இப்போதே களமிறங்கிவிட்டனர். சென்னையில் உள்ள கமலா, சத்யம், வெற்றி உள்ளிட்ட திரையரங்குகளில் வாரிசு படத்தின் பிரம்மாண்டமான பேனர்களை விஜய் ரசிகர்கள் வைக்கத் தொடங்கி விட்டனர். இந்த பிரம்மாண்டமான பேனர்கள் கடந்த சில தினங்களாக இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது அஜித் ரசிகர்களும் துணிவு படத்திற்கான போஸ்டர்களுடன் தியேட்டர்களை முற்றுகையிட்டு வருகின்றனர். ஆனால், செல்லும் இடமெல்லாம் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக தான் இருக்கிறது.
மாறி மாறி போலீஸில் புகார்
விஜய்யின் வாரிசு பேனர்கள் இடத்தை அடைத்துவிட்டதால், துணிவு போஸ்டர் வைக்க இடமில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல், விஜய் ரசிகர்களும் இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சில திரையரங்குகளில் துணிவு படத்தின் பேனர் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதற்குப் போட்டியாக அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்கள் மீது புகார் கொடுத்து வருகிறார்களாம். இதனால், போக்குவரத்து போலீஸார் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கேயும் பிரச்சினை தான்
பேனர் வைப்பதில் தான் போட்டியென்றால், வாகனங்களில் ஒட்டப்படும் விளம்பர போஸ்டர்களிலும் விதிமீறல்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கேயும் விஜய், அஜித் தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு காவல்துறையில் புகார் கொடுத்து வருகின்றனர். இந்த புகார்கள் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. முன்னதாக தமிழ்நாட்டில் அஜித்தின் துணிவு படத்திற்கு தான் அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கப்படுவதாக பேச்சுகள் அடிப்பட்டன. ஆனால், அது உண்மையில்லை என தெரியவந்தது. தற்போது பேனர் வைப்பதிலும் இருதரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.