ரஜினியை மீண்டும் வம்புக்கு இழுத்த கோமாளி.. இப்போ வேற லெவல் கலாய்.. கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல!

கோமாளி படத்தின் ஒளியும் ஒலியும் பாடலில் ரஜினியை வம்புக்கு இழுக்கும் வகையிலான வரிகள் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

Comali Trailer | Jayam Ravi | எனக்கும் சமுதாய பொறுப் இருக்கு- வீடியோ

சென்னை: ஒளியும் ஒலியும் பாடல் மூலம், கோமாளி படக்குழுவினர் மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்துள்ளனர்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் டிரெய்லர் கடந்த சனிக்கிழமை மாலை வெளியானது. சில மணி நேரத்திலேயே இந்த டிரெய்லர் காட்டுத்தீயாக பரவி பல லட்சம் பார்வையாளர்களை பெற்றது. இதற்கு காரணம் ரஜினி.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கேலி செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்த காட்சிகள் வைரலாக பரவியது. சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் கொந்தளித்தனர்.

வீடியோ அறிக்கை:

வீடியோ அறிக்கை:

இதையடுத்து வேறு வழியே இல்லாமல், இயக்குனர் பிரதீப் ரங்கநாதனும், தயாரிப்பாளர் ஐசரி கணேசன் கூட்டாக ஒரு வீடியோ அறிக்கை வெளியிட்டனர். அதில் தாங்கள் இருவரும் ரஜினி ரசிகர்கள் எனவும், சம்மந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெயம் ரவி அறிக்கை:

ஜெயம் ரவி அறிக்கை:

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஜெயம் ரவி, தான் மிகப் பெரிய ரஜினி ரசிகன் என்றும், துரதிர்ஷ்டவசமாக ரஜினி ரசிகர்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைத்துவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்தார். மேலும், கோமாளி பட டிரெய்லரை ரஜினிகாந்த் பார்த்ததாகவும், அதன் கிரியேட்டிவிட்டியை கண்டு பாராட்டியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ரஜினி ரசிகர்களின் உணர்வுகளை மதித்து சம்மந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாடல்:

பாடல்:

இந்நிலையில், கோமாளி படத்தில் ரஜினியை சீண்டும் வகையில் மீண்டும் ஒரு விஷயம் இடம் பெற்றுள்ளது. அந்த படத்தின் ஒளியும் ஒலியும் பாடல் வெளியாகியுள்ளது. அதில், "சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி ஆகிடுச்சே, இப்போ பேத்தியெல்லாம் வளர்ந்து வந்து ஜோடி சேர்ந்தாச்சு" என்ற வரி இடம்பெற்றுள்ளது.

ரஜினி ரசிகர்கள்:

ரஜினி ரசிகர்கள்:

இந்த வரிகள் ரஜினியை மீண்டும் வம்பிற்கு இழுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மீண்டும் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர். டிரைலர் சர்ச்சையே இன்னும் முழுசாக முடியாத நிலையில், அதே விவகாரத்தில் புதிதாக ஒரு பிரச்சினை கிளம்பி இருப்பது தயாரிப்பாளரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரஜினியுடனான நட்பு பாதிக்கப்பட்டு விடுமோ என ஐசரி கணேஷ் ஏற்கனவே கவலையில் இருக்கிறார். தற்போது இந்த பாடல் விவகாரம் அதை பூதாகரமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கேள்வி:

ரசிகர்கள் கேள்வி:

நாங்கள் எல்லாம் ரஜினி ரசிகர்கள், ரஜினி படங்களை பார்த்து தான் வளர்ந்தோம் என ஜெயம் ரவி, பிரதீப் ரங்கநாதன், ஐசரி கணேஷ் என எல்லோருமே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். ஆனால் உண்மையான ரசிகராக இருந்தால், அவரை இப்படி அவமானப்படுத்துவார்களா என ரசிகர்கள் கேள்வி கேட்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X