விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு.. இணையத்தில் கசிந்தது எப்படி? நீதிமன்றம் விளக்கம்!

சென்னை: தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து மனு இணையத்தில் கசிந்தது எப்படி என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செங்கல்பட்டு நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்கக் கோரி அவரது மனைவி சங்கீதா பிப்ரவரி 27ந் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 1999 ஆம் ஆண்டு தனக்கும் விஜய்க்கும் திருமணம் நடைபெற்றதாகவும், தங்களது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. எங்களுக்கு சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நடிகை ஒருவர் எங்களது வாழ்க்கையில் குறுக்கே வந்த பிறகுதான் எங்களது குடும்ப வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டதால், லண்டன் சென்றுவிட்டேன்.

Vijay Sangeetha

விவாகரத்து மனு: பின் இருவீட்டாரும் சமரசப்பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, 2021 ஆம் ஆண்டு இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்த போதும் தனித்தனியாக தான் வாழ்ந்து வந்தோம். ஆனால், அதன் பிறகும் எனது கணவர் விஜய் நடிகையுடனான தொடர்பை முறித்துக் கொள்ளாததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறோம் என கிட்டத்தட்ட 27 கருத்துக்களை மேற்கோள் காட்டி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த அந்த வழக்கு ஏப்ரல் 20ந் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

கசிந்தது எப்படி: இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியதை அடுத்து ரகசியமாக வைக்க வேண்டிய இந்த விவாகரத்து மனு இணையத்தில் கசிந்தது குறித்து தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் ஆதித்யா சோழன் தாக்கல் செய்த ஆர்.டிஐ மனுவிற்கு செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை நீதிபதி பதிலளித்துள்ளார். அதில், மனு கசிந்தது தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் நீதிமன்ற முத்திரை இல்லாததால், அந்த மனு நீதிமன்றத்தில் இருந்து கசியவில்லை என்றும், மனுதாரர் தரப்பு புகார் அளிக்காததால், சங்கீதா தரப்பில் இருந்து இந்த மனு வெளியாகி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X