இனி வாயே திறக்கக்கூடாது.. ஓவராக பேசிய சுசித்ராவுக்கு வாய்க்கட்டு போட்ட நீதிமன்றம்

சென்னை: பாடகி சுசித்ரா சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டிகளில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார். இதனையடுத்து கார்த்திக் குமார் சுசித்ரா மீது மான நஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுசித்ராவுக்கு அதிரடி உத்தரவை போட்டிருக்கிறது.

வானொலியில் ஆர்ஜே, பத்திரிகையாளர், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. முக்கியமாக பின்னணி பாடகியாக வெகு பிரபலமானவர் சுசித்ரா. மங்காத்தாவில் இடம்பெற்ற வாடா பின்லேடா, வேட்டைக்காரனில் இடம்பெற்ற சின்னத்தாமரை உள்ளிட்ட பல பாடல்களை பாடிய சுசித்ரா கடந்த 2016ஆம் ஆண்டு தலைப்பு செய்தியாக மாறினார். அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டிலிருந்து சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The court ordered that Suchitra should not talk about Karthik Kumar anymore

விவாகரத்து: அவர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். சுச்சி லீக்ஸ் சமயத்தில் சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும்; அதனால்தான் அவர் அப்படி நடந்துகொண்டார் என்றும் கார்த்திக் கூறியிருந்தார். அதற்கு பிறகு சுசித்ராவை காணவில்லை. அதேசமயம் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்துகொண்டு இப்போது இன்னொருவரை திருமணம் செய்து வாழ்ந்துவருகிறார் சுசித்ரா.

சுசித்ராவின் பேட்டி: கிட்டத்தட்ட 8 வருடங்கள்வரை எங்கிருந்தார் என்று தெரியாத சுசித்ரா இப்போது மீண்டும் பேட்டி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும் சுச்சி லீக்ஸ் என்பதே தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் செய்த பிராங்க்தான். முக்கியமாக அந்தப் புகைப்படங்களை திரிஷாதான் வெளியிட்டார் என்று சொல்லி பகீர் கிளப்பினார் சுசித்ரா.

திரிஷாவின் பதிலடி: மேலும் கார்த்திக் குமார் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்றும்; அவரும் தனுஷும் ஒரே அறையில் இருந்தார்கள் என்றும் கூறியிருந்தார். சூழல் இப்படி இருக்க சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த நடிகை திரிஷா, "நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்து பேசுகிறது' என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில் மற்றொரு யூட்யூப் சேனலுக்கு சுசித்ரா அளித்த பேட்டியில் திரிஷா குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் சுசித்ரா.

கார்த்திக்கின் பதிலடி: இதற்கிடையே தன்னை தன் பாலின ஈர்ப்பாளர் என்று சுசித்ரா சொன்னதற்கு பதிலடி கொடுத்த கார்த்திக், 'நான் ஒரு தன் பாலின ஈர்ப்பாளராக இருந்தால் அதனை வெளியில் சொல்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை' என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் சுசித்ரா இனி தன்னை பற்றி பேசக்கூடாது என்று கோரி ஒரு கோடி ரூபாய் எனக்கு அவர் தர வேண்டும் என மான நஷ்ட வழக்கை தொடர்ந்திருந்தார் கார்த்திக் குமார்.

அதிரடி உத்தரவு: இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கார்த்திக் குமார் பற்றி பேசுவதற்கு சுசித்ராவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்தது. இந்த தீர்ப்பால் கார்த்திக் குமார் சற்று நிம்மதி அடைந்திருப்பார் என்று ரசிகர்கல் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். மேலும் ஓவராக பேசிய சுசித்ராவுக்கு இது வேண்டும்தான் என்று தனுஷ், திரிஷா ரசிகர்களும் கூறிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X