கையில் உருளைக்கிழங்கு ஸ்பிரிங்ரோல்... முகத்தில் சாப்பிடும் ஆர்வம்... கீர்த்தியின் வேற லெவல் போட்டோ

ஐதராபாத் : நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய டயட்டில் மிகுந்த கவனம் நிறைந்தவர்.

யோகா உள்ளிட்ட பயிற்சிகளை முறையாக செய்து வருபவர். சமீபத்தில் அவர் வெளியிட்ட யோகா பயிற்சி வீடியோ வைரலானது.

இந்நிலையில் துபாயில் உருளைக்கிழங்கு ஸ்பிரிங் ரோலை வெளுத்துக்கட்ட தயாரான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

பிட்னஸ் பயிற்சிகள்

பிட்னஸ் பயிற்சிகள்

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ஹெல்த்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். நன்றாக கொழுகொழுவென்றிருந்த தன்னுடைய உடலை சிறப்பான பிட்னஸ் மற்றும் யோகா பயிற்சிகள் மூலம் சிறப்பானவகையில் மாற்றியுள்ளார். சமீபத்தில் யோகா தினத்தையொட்டி அவர் பகிர்ந்த யோகா வீடியோ மிகுந்த வரவேற்பை பெற்றது.

 சமூக வலைதளங்களில் பரபர

சமூக வலைதளங்களில் பரபர

சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவர் வெளியிட்ட டான்ஸ் வீடியோவும் வைரலானது. தான் சிறந்த டான்சர் என்பதை தன்னுடைய படங்களில் மட்டுமின்றி இத்தகைய தனிப்பட்ட வீடியோக்களின் மூலமாகவும் அவர் நிரூபித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் அவர் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறார்.

சாணிக் காயிதம் சூட்டிங்

சாணிக் காயிதம் சூட்டிங்

தற்போது செல்வராகவனுடன் சாணி காயிதம் படத்திற்காக மீண்டும் தனது சூட்டிங்கை துவங்கியுள்ள அவர், அதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இதுகுறித்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் திருடியாக நடித்துவரும் அவர், படம் தனது கேரியரில் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்த்துள்ளார்.

சாப்பிடும் ஆவல்

சாப்பிடும் ஆவல்

இந்நிலையில் அவர் துபாயில் உருளைக்கிழங்கு ஸ்பிரிங் ரோலை சாப்பிடும் ஆவலுடன் அதை கையில் பிடித்தபடி போஸ் கொடுக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதை சாப்பிடும் ஆவல் அனைத்து தடைகளையும் உடைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X