பிக் பாஸ் வீட்டில் எதுக்கெடுத்தாலும் பொசுக்குனு கண்ணீர்.. பிரபல நடிகைக்கு ரசிகர்கள் கொடுத்த பட்டம்!

By

ஐதராபாத்: பிக் பாஸ் வீட்டில் பிரபல நடிகை அடிக்கடி கண்ணீர் விடுவதை அடுத்து அவரை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆம் சீசன் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கிறது. சமீபகாலமாக நடக்கும் கூத்துக்களால் அந்த சேனலின் டிஆர்பி ஏறி வருவதாகச் சொல்கிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்க இருக்கிறார். பிக் பாஸில் இருப்பவர்களுடன் அவர் பேச இருக்கிறார்.

என்ன பேசப்போகிறார்?

என்ன பேசப்போகிறார்?

ஒவ்வொரு வாரமும் எதையாவது டச் பண்ணி பேசும் கமல்ஹாசன், இப்போது என்ன பேசப்போகிறார் என்ற ஆவலில் இருக்கிறார்கள், பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களும், ரசிகர்களும். கடந்த முறை அவர் அரசியல் பேசினார். தலைவரை தேர்ந்தெடுக்கும் முன்பாக, யோசிச்சு ஒட்டுப் போடுங்க என்றார். நான் டபுள் மீனிங்கில்தான பேசுகிறேன்.

அரசியல் பேசுவார்

அரசியல் பேசுவார்

யோசித்து ஓட்டு போடுங்க என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிக்கும் ரசிகர்களைப் பார்த்தும் சொன்னார் கமல். இந்த முறையும் அவர் அரசியல் பேசுவார் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த ஒருவாரமாக நடந்த புகார்கள் பற்றி வீட்டில் இருப்பவர்கள் அவரிடம் சொல்ல இருக்கிறார்கள். அதற்கு கமல் என்ன சொல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ரணகளபடுத்தி வருகிறார்

ரணகளபடுத்தி வருகிறார்

தமிழைப் போல தெலுங்கு பிக் பாஸ் 4 நிகழ்ச்சியும் பரபரப்பை கிளப்பி வருகிறது. ஒருவர் மீது ஒருவர் கடுமையாக புகார் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனாவும் தன் பங்குக்கு ரணகளபடுத்தி வருகிறார். ஆட்டம் பாட்டம், கிண்டல், ஜாலி கேலி என கொண்டாட்டத்தில் இருக்கிறது.

சிகரம் தொடு மோனல்

சிகரம் தொடு மோனல்

தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார், மோனல் கஜ்ஜார். இவர் தமிழில், கவுரவ் நாராயணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு, கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்தி, குஜராத்தி மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார்.

சமத்து பொண்ணு

சமத்து பொண்ணு

இவருக்கு, தெலுங்கு பிக் பாஸ் வீட்டின் டீம் மேட்ஸிடம், சமத்து பொண்ணு இமேஜ் இருக்கிறது. பார்வையாளர்களிடமும்தான். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை, அதிகம் சண்டை போடுவதில்லை, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருகிறார். ஆனால், அடிக்கடி உணர்வசப்பட்டு கண்ணீர் விட்டு விடுகிறார்.

தாங்க முடியாதது

தாங்க முடியாதது

தனது தந்தை பற்றி பேசும்போது திடீரென்று அவரை அறியாமலேயே ஏங்கி அழத் தொடங்கிவிட்டார். அழுகையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. 'அவர்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தவர். அவர்தான் என் பலம். அவர் இழப்பு எங்களால் தாங்க முடியாதது' என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்.

பரிதாபம் ஏற்படுத்தியது

பரிதாபம் ஏற்படுத்தியது

இது பார்வையாளர்களிடம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு சில சின்ன விஷயங்களுக்காகவும் அவர் கண்ணீர் விட்டார். ரசிகர்களிடையே பரிதாபத்தை பெறுவதற்காக அவர் இப்படி அழுகிறார் என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கூறி வருகின்றனர். இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் கண்ணீர் விட்டிருப்பதை டிரோல் செய்து வருகின்றனர்.

அடிக்கடி கண்ணீர்

அடிக்கடி கண்ணீர்

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவர் இப்படி இருப்பார்கள். இந்த முறை நடிகை மோனல் கஜ்ஜார், அடிக்கடி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வருட கிரை பேபி (Cry Baby) அவர்தான் என்று கிண்டல் செய்து வருகின்றனர், சோசியல் மீடியாவில்

Recommended Video

சண்டையின் போது சாப்பிட்ட கேப்ரில்லா.. இன்றைய டாப் 5 பீட்ஸ் - வீடியோ
கிரை பேபி பட்டம்

கிரை பேபி பட்டம்

தெலுங்கு பிக் பாஸின் முதல் சீசனின் பாடகி மது பிரியா எதற்கெடுத்தாலும் கண்ணீர் விடுபவராக இருந்தார். இரண்டாவது சீசனில் நடிகை பானுஶ்ரீ அப்படி இருந்தார். மூன்றாவது சீசனில் கிரை பேபி என்ற பட்டத்தை பெற்றவர் சிவா ஜோதி. இப்போது நடிகை மோனல் கஜ்ஜார் பெற்றிருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X