லியோ செட்டில் அசிங்கமா திட்டுனாங்க..நான் ரெடி பாடல் காட்சியின் போது நடந்த அவமானம்.. கதறிய டான்சர்ஸ்!

சென்னை: லியோ படத்தின் முதல் பாடலான நான் ரெடி பாடல் படமாக்கப்பட்டபோது நடந்த அவமானம் குறித்து நடனக் கலைஞர்கள் பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் திரையரங்கில் வெளியாக இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில். படக்குழுவினர் தீவிரமான பட ப்ரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

The dancers expressed their displeasure that they were insulted during the shooting of the song Leo Naan ready

இசை வெளியீட்டுவிழா ரத்து, டிரைலர் சர்ச்சை என படம் வெளியாவதற்கு முன்பே லியோ படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

நான் ரெடிதான் வரவா: அந்த வகையில், விஜய்யின் பிறந்த நாளன்று நான் ரெடிதான் வரவா பாடல் வெளியானது. இந்த பாடல் யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த பாடலில் சுமார் 1300க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் நடனமாடினார்கள். ஆனால், அதில் சில நடனக்கலைஞர்களுக்கு ஒரு நாள் கூட சம்பளம் வழங்கப்படவில்லையென்ற என்கிற புகார் எழுந்துள்ளது.

பெப்சி விளக்கம்: இது தவறான செய்தியாகும். தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

1500 பேர் டான்ஸ் ஆடினோம்: இந்நிலையில், நான் ரெடி தான் வரவா பாடலுக்கு நடனமாடிய நடனக்கலைஞர்கள் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில், லியோ படத்தின் பாடலுக்கு நடனமாட 1500 பேரை அழைத்தார்கள். இதில் சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்கள், உறுப்பினர் இல்லாதவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஆடினோம்.

அவமானப்படுத்தினார்கள்: படப்பிடிப்பின் போது எங்களை திட்டி அவமானப்படுத்தினார்கள், சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு டேபிள் போட்டு பிரியாணி பறிமாறினார்கள். உறுப்பினர் இல்லாத நாங்கள் வெட்ட வெளியில் நின்று கொண்டு சாப்பிட்டோம். நாங்களும் மனுஷங்கதானே. நான்கு மாதமா சம்பளம் வரவில்லை. முதலில் நாங்கள் யூனியனில் தான் கேட்டோம், அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. லியோ படம் வெளியாவதற்குள் அனைவருக்கும் சம்பளத்தை தரவேண்டும் என்று நடனக்கலைஞர்கள் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X