Vetrimaaran And Vijay - விஜய்க்கு வெற்றிமாறன் சொன்னது என்ன கதை தெரியுமா?.. இதோ முழு விவரம்

சென்னை: Vetrimaaran And Vijay (வெற்றிமாறன் மற்றும் விஜய்) நடிகர் விஜய்க்கு இயக்குநர் வெற்றிமாறன் சொல்லிய கதை குறித்த விவரம் தெரியவந்திருக்கிறது.

முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்யும், லோகேஷும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. படத்தின் ப்ரோமோவும் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

The details of the story told by director Vetermaran to actor Vijay have been revealed

லியோ ஷூட்டிங்: காஷ்மீரில் நடந்துவந்த லியோ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது சென்னை பையனூரில் நடந்துவருகிறது. அங்கு சஞ்சய் தத்துக்கும், விஜய்க்கும் இடையேயான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவுட்டோர் ஷூட்டிங்கை முடித்து விட்டு செட்டுக்குள் ஷூட்டிங் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த ஷூட்டிங்கில்தான் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் கலந்துகொள்ளவிருக்கிறார் என தெரிகிறது.

The details of the story told by director Vetermaran to actor Vijay have been revealed

அடுத்தது யாருடன்?: லியோ படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்தது யார் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது. அதன்படி முதலில் அட்லீ படத்தை இயக்குவார் என தகவல் வெளியான சூழலில் இப்போது வீரசிம்ஹா ரெட்டி படத்தின் இயக்குநர் படத்தை இயக்குவார் என புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம் இயக்குநர் யாராக இருந்தாலும் படத்தை தயாரிப்பது ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் என ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது.

வெற்றிமாறன் கூட்டணி: விஜய் ரசிகர்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பது இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநரான வெற்றிமாறனுடன் விஜய் எப்போது இணைவார் என்பதுதான். ஏற்கனவே வெற்றிமாறன் விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும் விரைவில் அவர்கள் இணைவார்கள் எனவும் கோலிவுட்டில் பரவலான பேச்சு எழுந்தது. ஆனால் அது வெறும் பேச்சோடு மட்டும் நின்றுகொண்டது. அதற்கு பிறகு விஜய் - வெற்றிமாறன் கூட்டணி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

வெற்றிமாறன் சொன்ன கதை: இந்நிலையில் விஜய்யிடம் வெற்றிமாறன் சொன்ன கதை குறித்த விவரம் தெரியவந்திருக்கிறது. ஆனால் அவர் அந்தக் கதையை 23 வருடங்களுக்கு முன்னதாக சொல்லியிருக்கிறார். வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர், "விஜய்யை நேரில் சந்தித்து 1999, 2000ஆம் ஆண்டு வாக்கில் ஒரு கதை சொன்னேன். அது நண்பன் கதை போன்றது. அது விஜய்க்காக எழுதப்பட்டது இல்லை. அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது" என்றார்.

The details of the story told by director Vetermaran to actor Vijay have been revealed

வெற்றிமாறனின் விடுதலை: வெற்றிமாறன் சமீபத்தில் விடுதலை படத்தை இயக்கினார். அதன் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் முடித்துவிட்டு அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை தொடங்கவிருக்கிறார். படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X