தமிழ் படத்திற்கு பாரபட்சமா? நயன்தாரா நடித்த ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படத்தில் இளையராஜாவின் பாடல்!
சென்னை: அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, கேத்ரின் தெரசா ஆகியோர் நடித்துள்ள 'மன சங்கர வரபிரசாத் காரு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ந் தேதி வெளியானது. இப்படத்தில் தளபதி படத்தில் இருந்து 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இளையராஜா ஏன் காப்புரிமை கேட்கவில்லை என்று எழுந்து இருக்கும் சர்ச்சைக்கு படத்தின் இயக்குநர் பதில் அளித்துள்ளார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 157வது படமான 'மன சங்கர வரபிரசாத் காரு' படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். இப்படத்தின் இருந்து ஏற்கனவே பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் வெளியாகி முதல் நாளில் 84 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் தளபதி படத்தில் இருந்து 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இளையராஜா ஏன் காப்புரிமை கேட்கவில்லை என்றும், தமிழ் படத்திற்கு ஏன் பாரபட்சமா? என்ற கேள்வி இணையத்தில் இழுந்து உள்ளது.

சுந்தரி பாடல்: இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசி உள்ள படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி, இந்த படத்தில் இளையராஜா அவர்கள் இசையமைத்த தளபதி படத்தில் வரும் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' என்ற பாடலை நான் பயன்படுத்தி இருக்கிறேன். சிரஞ்சீவியும், நயன்தாராவும் வரும் காதல் காட்சியில் இந்த பாடலை நான் பயன்படுத்திக் இருக்கிறேன். அந்தக் காட்சி ஒன் ஆப் தி பெஸ்ட் காட்சியாக படத்தில் வந்துள்ளது. இந்த நேரத்தில் இளையராஜாவை பற்றி நான் ஒரு விஷயத்தை நான் சொல்லியே ஆக வேண்டும், பலர் அவரை பற்றி சொல்வது என்ன வென்றால், அவரது பாடலை பயன்படுத்தினால் வழக்கு போட்டு விடுவார் என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு வழிமுறை இருக்கிறது, அந்த விஷயத்தையும் நாம் சரியாக செய்ய வேண்டும், அவர் மிகப்பெரிய இசை ஜாம்பவான். அவர் இசையமைத்த பாடலை நாம் படத்தில் பயன்படுத்தும் போது அவரிடம் சென்று அனுமதி பெற்று பயன்படுத்துவது தான் சரி. நானும் தயாரிப்பாளரும் நேரடியாக இளையராஜாவை சந்தித்து இந்த பாடலை எங்களுடைய படத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம் என அனுமதி கேட்டேன், அவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னார். நம் நேரடியாக அவரை அணுகினால் நிச்சயமாக அவர் ஒத்துக் கொள்வார் என்று சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











