விஜய் தேவரகொண்டாவிடம் அசிங்கமான கேள்வி கேட்ட இயக்குநர்.. இதெல்லாம் ஒரு கேள்வியா?கடுப்பான ரசிகர்கள்!
சென்னை : விஜய் தேவரகொண்டாவிடம் அந்தரங்க விஷயம் குறித்து கேள்வி கேட்ட இயக்குநரை ரசிகர்கள் கண்டபடி திட்டிதீர்த்து வருகின்றனர்.
பெண்களின் கனவு நாயகனான விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து ராஷ்மிகாவுடன் கீதா கோவிந்தம், டியர் சாம்ராட் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
இதையடுத்து மகாநதி, நோட்டா என இரு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.

விஜய் தேவரகொண்டா
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் 'லைகர்'. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைகர்
மும்பையில் குடிசை பகுதியில் வாழும் விஜய் தேவரகொண்டா சர்வதேச அளவில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்கிறார். ஒரு சாதாரண இடத்தில் இருந்து இந்திய அளவில் எவ்வாறு உயர்ந்தார் என்பதை மாஸ், ஆக்ஷன் கலந்த மிரட்டலாக சொல்லியிருக்கும் படம் தான் லைகர். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

மைக் டைசன்
இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்றை பெற்றது. இப்படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முதல் முறையாக திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி வெளியாகவுள்ளது. லைகர் படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அசிங்கமான அந்த கேள்வி
இந்நிலையில், தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகர் நடத்தி வரும் காபி வித் கரண் சீசன் 7 என்ற நிகழ்ச்சியில், விஜய் தேவகொண்டா மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் புரோமோ வெளியாகி உள்ளது. அதில், கடைசியாக எப்போது உடலுறவு கொண்டீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கரண் கேட்டுள்ளார். இதெல்லாம் ஒரு கேள்வியா? என்றும், அந்தரங்கமான கேள்வியை ஒரு பொது நிகழ்ச்சியில் கேட்கலாமா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











