என் உடல் பற்றி இயக்குனர் அப்படிச் சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன்... ஹீரோயின் பரபரப்பு பாலியல் புகார்

By

மும்பை: கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல நடிகை தெரிவித்திருந்த பாலியல் புகார், இப்போது இணையத்தில் மீண்டும் பரவி வருகிறது.

சினிமாவில், பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்று சில நடிகைகள் மீ டு புகார் அளித்து வந்தனர்.

நடிகை தனுஶ்ரீ தத்தா தொடங்கி வைத்த இந்த விஷயம், இந்தியா சினிமாவில் வேகமாக பரவியது.

ரஸாமி தேசாய்

ரஸாமி தேசாய்

சில நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை வெளிப்படையாகத் தெரிவித்தனர். இயக்குனர்கள், நடிகர்கள் மீது சிலர் புகார் தெரிவித்து இருந்தனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் இந்தி பிக்பாஸ் 13 வது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ரஸாமி தேசாயும் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து கூறியிருந்தார். இது பரபரப்பானது.

சுர்வீன் சாவ்லா

சுர்வீன் சாவ்லா

இந்நிலையில், நடிகை சுர்வீன் சாவ்லாவும் தானும் இந்தப் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாகப் பேட்டி ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்து இருந்தார். இந்தி நடிகையான இவர், தமிழில் வசந்த் இயக்கிய, மூன்று பேர் மூன்று காதல், புதிய திருப்பங்கள், அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார்.

பயங்கரமான அனுபவம்

பயங்கரமான அனுபவம்

இவர் தான் எதிர்கொண்ட பாலியல் தொல்லைப் பற்றி கூறும்போது, சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கு நன்றாகச் சென்றாலும் தென்னிந்திய சினிமாவுக்குப் போனதும் இதுபோன்ற பயங்கரமான அனுபவங்களை எதிர்கொண்டேன். ஒரு இயக்குனர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அவர் என் உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் அனுபவிக்க விரும்புவதாகச் சொன்னார். இதே போல மூன்று அனுபவங்களைச் சந்தித்தேன்.

Recommended Video

Thara Kalyan Illegal relationship? | Gossip | Mollywood Actress
அதிர்ச்சி அடைந்தேன்

அதிர்ச்சி அடைந்தேன்

தேசிய விருது பெற்ற மற்றொரு இயக்குனர் ஒருவரும் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். சமீபத்தில் பாலிவுட் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, இதுபோன்ற மோசமான அனுபவத்தை எதிர்கொண்டேன். ஒரு இயக்குனர், என் கிளிவேஜையும் என் தொடைகளையும் பார்க்க விரும்புவதாகச் சொன்னார். இதனால் அதிர்ச்சி அடைந்தேன். என் தன்னம்பிக்கை காரணமாக இதில் இருந்து நான் வெளியேறி வந்தேன் என்று தெரிவித்து இருந்தார். அப்போது இப்படி அவர் கொடுத்த பேட்டி, இப்போது மீண்டும் இணையத்தில் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X