23 நாளில்.. 25 லட்சத்தில் எடுக்கப்பட்ட மாயக்கூத்து.. வியந்து பார்க்கும் திரைத்துறை!

சென்னை: இன்றைய காலகட்டத்தில் பல கோடிகளை கொட்டி பிரம்மாண்டம் என்று பெயரில், தயாரிப்பாளரின் பணத்தை தண்ணியாக செலவு செய்து இயக்குநர்களுக்கு மத்தியில், வெறும் 23 நாளில், 25 லட்சத்தில் மாயக்கூத்து என்ற படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குநர் ஏ. ஆர். ராகவேந்திரா. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

மாயக்கூத்து படத்தில் நாகராஜன் கண்ணன், மறைந்த நடிகர் டெல்லி கணேஷ், ராமசாமி, காயத்ரி, சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர் ஏ. ஆர். ராகவேந்திரா. ராகுல் மூவி மேக்கர்ஸ் & அபிமன்யு கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுந்தர் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஞ்சனா ராஜகோபாலன் இசையமைத்து உள்ளார். படத்தொகுப்பாளர் நாகூரான் போன்ற தொழில் நுட்பக்கலைஞர்களின் தரமான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

Maya Koothu interview
Photo Credit:

மாயக்கூத்து படத்தின் கதை: இப்படத்தில் பிரபல எழுத்தாளராக நாகராஜன் கண்ணன் நடித்துள்ளார். தொடர் கதைகள் எழுதுவதில் வல்லவரான இவர் கர்வம் கொண்டவராக இருக்கிறார். அவர் எழுதிய கதையில், பல கொலைகளை நடக்கிறது. சாய் தீனா, ரௌடியான இவன் 50 கொலையை செய்து ரவுடித்தொழிலை கைவிட விரும்புகிறான். மற்றொரு கதையில் கதாபாத்திரமான ஐஸ்வர்யா ரகுபதி மீது திருட்டுப்பழி விழுகிறது. அடுத்த கதையில் கதாபாத்திரமான மிருதுளா மருத்துவராக விரும்பி, அது நடக்காமல் போவதால் தற்கொலை செய்ய முடிவு செய்கிறது. இந்த 3 கதாபாத்திரங்களும், திடீரென உயிர் பெற்று நாகராஜன் கண்ணனிடம் நேரில் தோன்றி, எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கூறி, அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது. இதில் அந்த எழுத்தாளர் தப்பித்தாரா...இல்லையா என்பது தான் படத்தின் கதை. இதில், எழுத்தாளராக நடித்து இருக்கும் நாகராஜன் சிறப்பாக நடித்து இருப்பதாக படம் பார்த்தவர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

மூன்று ஆண்டு போராட்டம்: இந்த படத்தை வெறும் 23 நாட்களில், 25 லட்சம் ரூபாயில் முடித்து முடித்தாக படத்தின் இயக்குநர் ராகவேந்திரா கூறியுள்ளார். படம் குறித்து பேசிய இயக்குநர், இந்த உலகத்தில் ஏன் கெட்டது நடக்கிறது, அது கடவுள் கொடுக்கும் தண்டனையா.. அதற்கு காரணம் என்ன என்றுயோசித்த போது தான் இந்த கதை என் மனதில் வந்தது. இந்த படத்தை எடுப்பதற்கு போதுமான பணம் இல்லாததால், மிக குறைற்த செலவில் படத்தை எடுக்க திட்டமிட்டு, படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரையும் தேர்வு செய்து பட்ஜெட்டிற்கு தகுந்த நடிக்க வைத்தோம். இவ்வளவு கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து செலவு செய்த போதும், படத்தை வெளியிட படாத பாடு பட்டோம். மூன்று ஆண்டு போராட்டத்திற்கு பிறகே மாயக்கூத்து படம் தியேட்டரில் வெளியாகி உள்ளது என அதன் இயக்குர் பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X