Don't Miss!
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சினிமா தயாரிப்பாளராகும் சுரேஷ்கிருஷ்ணா! மிஸ் இந்தியா அழகியை அறிமுகப்படுத்துகிறார்
ரஜினி, கமல் ஆகியோருக்கு மாஸ் திரைப்படங்களை கொடுத்தவர் சுரேஷ்கிருஷ்ணா. கடந்த 27 வருடங்களில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
'சத்யா', 'இந்திரன் சந்திரன்', 'அண்ணாமலை', 'வீரா', 'பாட்ஷா', தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜூன், மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான்கான் உள்ளிட்ட சூப்பர் மற்றும் மெகா ஸ்டார்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது சுரேஷ் கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் புதிய படக்கம்பெனியை தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மூலம் புதிய படம் ஒன்றை தயாரித்து, இயக்கவிருக்கிறார்.
காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தில் நாயகனாக பிரின்ஸ் மற்றும் நாயகியாக '2012 மிஸ் இந்தியா' வான்யா மிஷ்ரா ஆகியோர் அறிமுகமாகின்றனர். இதற்கான போட்டோ சூட்டிங் சென்னையில் முடிந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.