நாய் ரசித்து பார்த்த “தி லயன் கிங்“.. அசந்துபோன இணையவாசிகள்.. வேகமாக பரவும் வீடியோ !

சென்னை : தி லயன் கிங் படத்தை ரசித்துப்பார்த்த செல்லப்பிராணி வைரலாகும் வீடியோ.

அனிமேஷன் படம் என்றாலே டிஸ்னி நிறுவனத்தினர் தான் மக்கள் மனதில் நிற்கின்றனர். அந்த அளவுக்கு அனிமேஷனுக்கும் அவர்களுக்கும் ஒரு நெருங்கிய பாசம் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் தயாரிக்கும் படங்கள் குழந்தைகளை மட்டும் அல்லாமல் பெரியவர்களை கூட ஈர்க்கும் என்பதில் துளி கூட சந்தேகம் வேண்டாம்.

 The dog saw the movie The lion King

அந்த வகையில் கடந்த வருடம் வெளிவந்து சக்க போடு போட்ட படம் தான் "தி லயன் கிங்". இந்த படம் வெளிவந்த நாள் முதல் இன்று வரை அனைவரும் ரசிக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

காட்டில் வாழும் மிருகங்களின் வாழ்க்கையை தத்ரூபமாக சொல்லியிருப்பது இந்த படத்தின் ஹை லைட். குட்டி சிங்கம் செய்யும் சேட்டைகள் குழந்தைகளை ஈர்த்தது, முபாசா சிங்கம் ஹீரோவை கொல்லும் காட்சிகளில் அனைவரையும் சீட்டின் நுனியில் அமரச்செய்தது என்பது அனைவரும் அறிந்ததே..

காட்டில் வாழும் விலங்குகளுக்கு கூட அன்பு, பாசம், அழுகை, பழிவாங்கும் குணம் அனைத்தும் இருக்கிறது என்பதை நிரூபித்த படமாக லயன் கிங் அமைந்து இருந்தது.

 The dog saw the movie The lion King

அப்படி பட்ட இந்த படத்தை மனிதர்கள் நாம் ரசித்தோம் என்பதை விட வேறு ஒரு ஜீவனும் இதனை ரசித்து இருக்கிறது. இதை விட வேற என்ன வெற்றி வேண்டும். ஆம் ஒரு நாய் இந்த படத்தை பார்த்து ரசித்த காட்சி அனைவரையும் ஈர்த்ததுடன், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு விலங்கான நாய் கூட விலங்குகள் வரும் படத்தை ரசிக்கிறது என்றால் எந்த அளவிற்கு அந்த படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதை அனைவரும் நினைத்து பார்க்கவேண்டும்.

நாய் இந்த படத்தை பார்க்கும் வீடியோ வெளிவந்ததிலிருந்து, அது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அனைத்து வலைத்தளங்களிலும் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. பொதுவாக குழந்தைகளை பெற்றோர் கம்ப்யூட்டர் பார்க்காதே, டிவி யை பக்கத்தில் சென்று பார்க்காதே என்று கூறுவார்கள்.. ஆனால் மிருகமாக இருந்தாலும் பிடித்த படமாக இருந்தால் பக்கத்தில் சென்று பார்ப்பதை யாராலும் தவிர்க்க முடியாது.

இந்த வீடியோ மூலம் டிஸ்னி நிறுவனம் குழந்தைகள், பெரியவர்கள் என்று கணக்கில்லாத ரசிகர்களை கொண்டதுடன் இப்படத்தின் மூலம் விலங்குகளின் அன்பை பெற்றதுடன், புது ரசிகர் பட்டாளத்தை தன் வசம் ஈர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X