ஈஃபிள் டவரை விட எங்கப்பாதான் பெருசு.. அப்பா தேவாவை மெய்சிலிர்க்க வைத்த மகன் ஸ்ரீகாந்த் தேவா!

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு புத்தாண்டை கொண்டாடும் விதமாக டிசம்பர் மாதத்தில் சுற்றுலா சென்றுள்ளார் இசையமைப்பாளர் தேவா. உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் டவர் அருகே அப்பா தேவாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஸ்ரீகாந்த் தேவா பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கடந்த நவம்பர் 20ம் தேதியுடன் 75 வயதை நிறைவு செய்த இசையமைப்பாளர் தேவா, இளையராஜா போல இந்த வயதிலும் காப்புரிமை சண்டை எல்லாம் போடமாட்டேன் என்றும் தனது பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்தி இன்றைய இளைஞர்களுக்கு தெரியப்படுத்தினாலே போதும் என்கிற அளவுக்கு தாராள மனம் கொண்டவராகவே திகழ்ந்து வருகிறார்.

The Eiffel Tower is iconic but my dad is my forever icon - Srikanth deva praises Deva
Photo Credit:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை படையப்பா படம் வெளியாவதை போல பாட்ஷா படமும் ஸ்பெஷல் ஷோவாக சில இடங்களில் வெளியாகிறது. தேனிசை தென்றல் தேவாவின் பாடல்கள் நாளை ரசிகர்களை ஆட்டம் போட வைக்கப் போகிறது.

பிரான்ஸில் தேனிசை: 1950ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி பிறந்த தேவா தேனிசை தென்றல் தேவாவாக 40 ஆண்டுகள் தமிழ் சினிமா ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து வருகிறார். இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை வெளிநாட்டில் கொண்டாட முடிவு செய்த ஸ்ரீகாந்த் தேவா தனது தந்தையை பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஈஃபிள் டவரை விட எங்கப்பா பெருசு: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் டவர் அருகே தனது அப்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா "Proud to stand beside my hero, APPA!❤️🗼The Eiffel Tower is iconic, but my dad is my forever icon" என ஈஃபிள் டவர் தலைசிறந்த ஒன்று, ஆனால், எனக்கு எப்போதுமே எங்க அப்பா தான் அதைவிட சிறந்த ஒரு விஷயம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X