நடிகையை அறைக்குள் சிறை வைத்த தனியார் டெலிகாம் நிறுவன ஊழியர்கள்..என்னதான் நடந்தது?
பிரபல நடிகை ஒருவர் சிம்கார்டு வாங்கப்போன இடத்தில் ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து அறையில் தள்ளி பூட்டியுள்ளனர்.
தான் நடிகை எனக்காட்டிக் கொள்ளாமல் சிம் கார்டு வாங்கப்போனவர் சிறைப்பட்ட சுவராஸ்ய நிகழ்வு கேரளாவில் நடந்துள்ளது.
போலீஸ் வந்து மீட்டு உண்மை அறிந்த டெலிகாம் நிறுவன ஊழியர்கள் நடிகையிடம் மன்னிப்பு கேட்டதால் தப்பித்தனர்.

எதிர்பாராத மன உளைச்சல்
சில நேரம் நாம் எதிர்பாராத செயல்கள் மன உளைச்சலை தரும் நிகழ்ச்சியாக மாறிவிடும். புகழ்பெற்ற நடிகை ஒருவர் தான் யார் எனக்காட்டிக்கொள்ளாமல் சிம் கார்டு வாங்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை அறைக்குள் தள்ளி டெலிகாம் ஊழியர்கள் சிறைவைக்க போலீஸ் வந்து மீட்ட நிகழ்ச்சி கேரளாவில் நடந்துள்ளது. நடிகைக்கு இது அவமானகரமான மறக்கமுடியாத பாடமாக அமைந்தாலும் ஊழியர்களை மன்னித்துள்ளார்.

மலையாளப்பட உலகின் முன்னணி நடிகை
'அங்கமாலி டைரீஸ்' படத்தில் லிச்சியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை அன்னை ரேஷ்மா ராஜன். அண்ணா 2017 ஆம் ஆண்டு அங்கமாலி டைரிஸ் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் வெளிப்பாடின் புத்தகம், லோனபனின் மம்மோதிசா, மதுர ராஜா, ஸ்வர்ணமாஸ்யமணல், அய்யப்பனும் கோஷியும் போன்ற பல மலையாள படங்களில் நடித்தார். சினிமாவில் நுழைவதற்கு முன்பு அன்னா ரேஷ்மா ராஜன் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக இருந்தார்.

தொலைந்துப்போன சிம் கார்டு வாங்க சாதாரண பெண் போல் சென்ற நடிகை
அன்னா ராஜன் சமீபத்தில் தொலைந்துப்போன தனது சிம்கார்டுக்கு மாற்றாக சிம்கார்டு ஒன்றை வாங்க ஆலுவாவில் உள்ள ஒரு டெலிகாம் நிறுவனத்துக்கு சென்றுள்ளார். சிம் கார்டு வாங்க சம்பந்தப்பட்டவர் ஆதார் கார்டை சமர்பித்து நேரடியாக வாங்கவேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் தன்னை நடிகை என்று காட்டிக்கொள்ளாமல் கூலிங்கிளாஸ் எல்லாம் போட்டுக்கொண்டு டெலிகாம் நிறுவனத்துக்கு போயுள்ளார்.

ஊழியர்களுடன் மோதல் அறைக்குள் சிறை வைத்த ஊழியர்கள்
சிம்கார்டு வாங்கும்போது ஊழியர்கள் கேட்ட கேள்விகள் அன்னா ராஜனை சூடேற்ற அவர் வாக்குவாதம் செய்ய பதிலுக்கு ஊழியர்கள் வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் அவர் நடிகை என்று தெரியாமலேயே, ஒரு பெண் என்றும் பாராமல் அவரை வலுக்கட்டாயமாக ஒரு அறையில் தள்ளி பூட்டியுள்ளனர். அறைக்குள் சிறைப்பட்ட நடிகை அழுதுள்ளார், பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வந்து அறைக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த நடிகையை மீட்டனர்.

நடிகைன்னா மன்னிப்பு சாதாரண பெண் என்றால் சிறைவைப்பா?- அன்னா ராஜன்
அவர் மீட்கப்பட்டவுடன் தான் அவர் நடிகை என தெரிந்து அதிர்ந்துபோன ஊழியர்கள் ஒன்று திரண்டு மன்னிப்பு கோரினர். தாங்கள் நடிகை என அறியாமல் செய்ததாக சொன்னதை கேட்ட அன்னா ராஜன், ஓ நடிகை என்பதால் மன்னிப்பா? அப்படியானால் சாதாரண பெண்களிடம் இப்படி நடப்பீர்களா? என கேட்டுள்ளார். பின்னர் விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என ஊழியர்கள் கேட்டுக்கொண்டதால் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனாலும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











