அந்த படத்தோட பஞ்சாயத்து.. இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்.. நடந்தது என்ன?
சென்னை:சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் இயக்குநர் ஷங்கரின்.10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. என்னுடைய கதையைத் திருடி இயக்குநர் ஷங்கர், எந்திரன்' படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த சங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் என பலரும் நடித்திருந்த இப்படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இந்த திரைப்படத்தின் கதையை தன்னுடையது என, நக்கீரன் முதன்மைத் துணை ஆரூர் தமிழ்நாடன் என்பவர் 2011 ஆம் ஆண்டு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
கதை திருட்டு வழக்கு: இதைத்தொடர்ந்து, எந்திரன் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், தாங்கள் கதையை திருடவில்லை எனவே இந்த வழக்கு செல்லாது என உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குக்கு இடைக்காலத்தடை விதித்தது.
நீதிமன்றம் உத்தரவு: இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஜூகிபா' கதைக்கும் எந்திரன் சினிமாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாகத் தெரிகிறது என்பதால், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட, ஷங்கருக்கு எதிரான வழக்கில் காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என 2019 ஆம் ஆண்டு சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
விறுவிறுப்பான விசாரணை: உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என கூறி ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை 2020 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதன்பின், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம், தள்ளுபடி செய்ய,அரூர் தமிழ்நாடன் மேல்முறையீடு செய்திருந்தார்.
சொத்துக்கள் முடக்கம்: இந்நிலையில், இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், எந்திரன் திரைப்பட கதை காப்புரிமை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











