தி எக்ஸார்சிஸ்ட் பட ஒளிப்பதிவாளர் ஓவன் ராய்ஸ்மேன் காலமானார்.. ஹாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி!

நியூயார்க் : தி எக்ஸார்சிஸ்ட் என்ற மிரட்டலான படத்தின் ஒளிப்பதிவாளர் ஓவன் ராய்ஸ்மேன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

தன்னுடைய படங்களுக்காக 5 முறை ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர் ராய்ஸ்மேன்.

தன்னுடைய இரண்டாவது படமான தி ப்ரெஞ்ச் கனெக்ஷன் படத்திலேயே மிரட்டலான ஒளிப்பதிவை கொடுத்த ராய்ஸ்மேன் சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தார்.

ஒளிப்பதிவாளர் ஓவன் ராய்ஸ்மேன் காலமானார்

ஒளிப்பதிவாளர் ஓவன் ராய்ஸ்மேன் காலமானார்

ஹாலிவுட்டில் தி ப்ரெஞ்ச் கனெக்ஷன், தி எக்ஸார்சிஸ்ட் என மிரட்டலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து சிறப்பான ஒளிப்பதிவாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் ஓவன் ராய்ஸ்மேன். ஓவன் ராய்ஸ்மேன் நேற்றைய தினம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. சிறப்பான பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள ராய்ஸ்மேன் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மிரட்டலான காட்சிகளுக்கு சொந்தக்காரர்

மிரட்டலான காட்சிகளுக்கு சொந்தக்காரர்

ராய்ஸ்மேன் மறைவுக்கு அவரது ரசிகர்களும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். இவர் தன்னுடைய இரண்டாவது படமான தி ப்ரெஞ்ச் கனெக்ஷன் படத்திலேயே மிரட்டலான மற்றும் த்ரில்லிங்கான கார் சேஸிங் காட்சிகளை எடுத்து அனைவரையும் கவர்ந்தவர். தி ப்ரெஞ்ச் கனெக்ஷன் படத்தில் வில்லியம் பிரைட்கின்னுடன் இணைந்து ராய்ஸ்மேன் பணியாற்றியுள்ளார்.

 சிறப்பான தி ப்ரெஞ்ச் கனெக்ஷன் படம்

சிறப்பான தி ப்ரெஞ்ச் கனெக்ஷன் படம்

தி ப்ரெஞ்ச் கனெக்ஷன் படம் கடந்த 1971ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தில் கார் சேஸிங் காட்சிகளில் மட்டுமில்லாமல் படம் முழுமையிலும் இவரது ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்தது. நியூயார்க்கின் குறுகலான வீதிகளில் இவர் எடுத்த பல காட்சிகள் ரசிகர்களை கட்டிப் போட்டவை.

5 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை

5 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை

தன்னுடைய தி பிரெஞ்ச் கனெக்ஷன்ஸ், தி எக்ஸார்சிஸ்ட், நெட்வொர்க், டூட்சி, வியாட் யார்ப் போன்ற படங்களுக்காக 5 முறை ஆஸ்கார் விருதுகளுக்காக ராய்ஸ்மேன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த 2017ம் ஆண்டில் தன்னுடைய ஒளிப்பதிவாளர் பணிக்காக இவருக்கு கௌரவ விருதும் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுகளுக்கு சொந்தக்காரர்

விருதுகளுக்கு சொந்தக்காரர்

மேலும் அமெரிக்க ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் கடந்த 1997ம் ஆண்டில் இவர் தட்டிச் சென்றுள்ளார். பிரபல ஹாலிவுட் இயக்குநர் சிட்னி பொல்லாக்குடன் 5 படங்களில் ஓவன் ராய்ஸ்மேன் பணியாற்றியுள்ளார். த்ரீ டேஸ் ஆப் தி கான்டர், தி எலெக்ட்ரிக் ஹார்ஸ்மேன், ஆப்சென்ஸ் ஆப் மலைஸ் மற்றும் ஹவானா போன்ற படங்களில் இவர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X