»   »  தந்தையைத் தேடும் தனுஷின் பயணம்! #TheExtraordinaryJourneyoftheFakir

தந்தையைத் தேடும் தனுஷின் பயணம்! #TheExtraordinaryJourneyoftheFakir

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் தனுஷின் முதல் ஹாலிவுட் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் மட்டுமல்ல, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்துகிறார் தனுஷ்.

ஹாலிவுட்டில் அவர் நடிக்கும் முதல் படம் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கிர் (The Extraordinary Journey ofthe Fakir ).

தனுஷ்

தனுஷ்

கென் ஸ்காட் இயக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பெரினிஸ் பெஜோ, பர்கட் அப்டி, எரின் மொரியர்டி, ஆபெல் ஜாஃப்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

உலகப் பயணம்

உலகப் பயணம்

தன் தந்தையைத் தேடி உலகெங்கும் பயணிக்கிற ஒரு இளைஞனின் பாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ். முழுக்க முழுக்க காமெடியாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்களாம்.

பெரும் எதிர்ப்பார்ப்பு

பெரும் எதிர்ப்பார்ப்பு

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் நடக்கும் இந்தப் படத்துக்கு இப்போதே ஹாலிவுட்டில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளதாக வெரைட்டி தெரிவித்துள்ளது.

ஆங்கில நாவல்

ஆங்கில நாவல்

ரோமன் ப்யூர்டோலஸ் எழுதிய 'The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe' என்ற நாவலைத் தழுவித்தான் இந்தப் படத்தை எடுத்துள்ளார் ஸ்காட். 2014-ல் வெளியான இந்தப் படம் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பெரிய நிறுவனங்கள்

பெரிய நிறுவனங்கள்

அமெரிக்க திரைப்பட சந்தையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இந்தப் படம் சோனி பிக்சர்ஸ் உள்ளிட்ட மெகா நிறுவனங்கள் உலகெங்கும் வெளியிடுகின்றன.

தனுஷின் சாதனை

தனுஷின் சாதனை

ஒரு இந்திய நடிகர் நடித்த ஹாலிவுட் படம் ஒன்று இந்த அளவுக்கு பெரிதாக வியாபாரமாகியிருப்பது தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கிர் படத்துக்குதான். இது தனுஷின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான சாதனை என்றே சொல்ல வேண்டும்.

English summary
The first look poster of Dhanush's Hollywood film ‘The Extraordinary Journey of the Fakir’ has been released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X