Maniratnam - ஒட்டுமொத்தமாக கவிழ்த்த மணிரத்னம்.. அப்செட்டில் சோழர்கள் - விருந்தை தவிர்த்த பின்னணி என்ன?
சென்னை: Maniratnam (மணிரத்னம்) மணிரத்னம் வைத்த விருந்துக்கு பொன்னியின் செல்வனில் நடித்த முன்னணி நடிகர்கள் யாருமே வராதது கோலிவுட்டில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. ஐந்து பாகங்கள் கொண்ட நாவல் திரைப்படத்துக்காக இரண்டு பாகங்களாக சுருக்கப்பட்டது. இதில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரைவ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, பிரபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனும் சேர்ந்து தயாரித்திருந்தது.

பொன்னியின் செல்வன் 1: இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானதால் படத்துக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் குடும்பத்தோடு படை எடுத்தனர். அதனால் படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை செய்தது. அதேசமயம் படத்தை பார்த்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் மணிரத்னம் கொஞ்சம் ஏமாற்றிவிட்டார். இருந்தாலும் இரண்டாம் பாகத்தில் குறைகளை நிவர்த்தி செய்துவிடுவார் என நம்பிக்கை தெரிவித்தனர்.
பொன்னியின் செல்வன் 2: இதனையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தில் விட்டதை இரண்டாம் பாகத்தில் பிடித்துவிடுவார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் சென்றனர். ஆனால் இரண்டாம் பாகத்தை பார்த்தவர்கள் இதற்கு முதல் பாகமே பரவாயில்லை என்ற கருத்தையே முன் வைத்தனர். இதன் காரணமாக படக்குழு ரொம்பவே அப்செட்டாக இருக்கிறது.
டல்லடித்த வசூல்: முதல் பாகம் அசால்ட்டாக 500 கோடி ரூபாயை தாண்டிய சூழலில் இரண்டாம் பாகம் அதனை தாண்டி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனம் காரணமாக இதுவரை படம் 500 கோடியைக்கூட வசூலிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, பொன்னியின் செல்வன் 2 படக்குழு நினைத்த 1000 கோடி ரூபாய் வசூல் கனவு வெறும் கனவாகவே முடிந்துவிட்டது.

மணிரத்னம் வைத்த விருந்து: படத்தின் ரிசல்ட் எப்படி வந்திருந்தாலும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மணிரத்னம் விருந்து ஒன்றை வைத்திருக்கிறார். கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் ஒரு க்ளப்பில் இந்த விருந்து நடந்திருக்கிறது. இதில் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், படத்தில் நடித்த ஒரு சிலரும் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் படத்தில் நடித்த முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொள்ளவில்லையாம்.
என்ன காரணம்?: மணிரத்னம் என்ற மிகப்பெரிய இயக்குநர் வைத்த விருந்தில் படத்தில் நடித்த முன்னணி கலைஞர்கள் கலந்துகொள்ளாதது மணிரத்னத்தை ரொம்பவே அப்செட்டாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் படத்தில் நடித்தவர்கள் எக்கச்சக்க நாள்களை பொன்னியின் செல்வனுக்காக செலவழித்தார்கள். ஆனால் படத்தின் ரிசல்ட்டோ வேறு மாதிரி இருக்கிறது. குறிப்பாக அவர்கள் எதிர்பார்த்தபடி பெரிய திருப்புமுனை எதுவும் பொன்னியின் செல்வன் மூலம் கிடைக்கவில்லை.
இதற்கு கொடுத்த கால்ஷீட்டை வேறு படங்களுக்காவது கொடுத்திருக்கலாம் என்ற எண்ணமே படத்தில் நடித்த முன்னணி கலைஞர்களுக்கு இருக்கிறது. நினைத்தபடி மணிரத்னம் இந்தப் படத்தை பெரிதாக கொடுக்கவில்லை. அதை ரிசல்ட்டே உணர்த்துகிறது. இதன் காரணமாகத்தான் மணிரத்னம் வைத்த விருந்துக்கு அவர்கள் யாரும் வரவில்லை என்ற தகவல் கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











