ஒரு கம்புக்கு புடவை கட்டினா கூட உரசி உரசி பார்ப்பாங்க.. வைரலாகும் சமந்தாவின் ’அந்த’ காட்சி!
சென்னை: தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் நேற்று நள்ளிரவு அமேசான் பிரைமில் வெளியானது.
முதல் சீசனில் பாகிஸ்தான் பிரச்சனையை கையில் எடுத்த இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இரண்டாவது சீசனில் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்.
ராஜி கதாபாத்திரத்தில் ஈழப் போராளியாக நடிகை சமந்தா நடித்து தனக்கு முன் வைக்கப்பட்ட கண்டனங்களை காலி செய்துள்ளார்.

ஏகப்பட்ட தமிழ் வசனங்கள்
தி ஃபேமிலி மேன் 2 முழுக்க முழுக்க தமிழ் ஈழ பிரச்சனையை கையில் எடுத்த நிலையில், ஆரம்ப காட்சி முதல் இறுதி வரை ஏகப்பட்ட தமிழ் வசனங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழ் மற்றும் தெலுங்கில் வெப்சீரிஸ் வெளியாகாத நிலையிலும், தமிழ் ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு இந்த வெப் தொடர் உள்ளது. இந்தி ரசிகர்கள் இதனால் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

மிரட்டும் ராஜி
நடிகை சமந்தா இந்த வெப் தொடரில் ஈழ போராளியாக நடித்துள்ளார். சென்னையில் ஒரு மிஷனுக்காக வரும் அவர் செய்யும் காரியங்களும், அனுபவிக்கும் வலிகளையும் அப்படியே ராவாக எடுத்துள்ளனர் இயக்குநர்கள். இந்த வெப் தொடரில் நடித்ததற்காக சமந்தாவுக்கு எதிர்ப்புகள் குவிந்த நிலையில், தற்போது எதிர்ப்புகள் பாராட்டுக்களாக மாறும் நிலை உருவாகி உள்ளது.
அந்த இடத்தில் கை வைத்து
ராஜியாக கருப்பு நிற மேக்கப் போட்டுக் கொண்டு அதிரடியாக நடித்துள்ளார் சமந்தா. இந்த வெப் தொடரில் இடம்பெற்றுள்ள காட்சிகளை தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். சென்னையில் பேருந்தில் பயணிக்கும் சமந்தாவை பின்னால் உரசியும், அவரது மார்பு பகுதியை பஸ்சில் பயணம் செய்யும் பொறுக்கி தொடுவது போன்ற காட்சிகள் சமூகத்தில் தினமும் நடைபெறும் அவலத்தை தோலுரித்துக் காட்டுகிறது.

கம்புக்கு புடவை கட்டினா கூட
அந்த காட்சியில் சமந்தா ரியாக்ட் செய்யாமல் அமைதியாக இருப்பதும் அதை பார்க்கும் ஒரு பாட்டி அந்த பெண்ணை உரசாமல் தள்ளி நில்லு எனக் கூறிவிட்டு, கம்புக்கு புடவை கட்டினாக் கூட உரசிட்டே இருப்பாங்க நாய்ங்க என திட்டும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video

பாடி டபுள்
மேலும், அந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் சமந்தா அந்த காட்சியில் நடித்து இருக்க மாட்டார் என்றும் அது பாடி டபுள் (டூப் போட்டு) காட்சி என்பது அதன் ஆங்கிள்கள் மூலமாகவே தெரிகிறது என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகள் பரவி வருகிறது. ஆனால், மேலும் சில போல்டு சீன்களை பார்க்கும் போது இந்த காட்சியிலும் சமந்தாவே தான் நடித்திருப்பார் என்றும் சமந்தா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











