என் தமிழினத்தை நான் காப்பாத்துவேன்.. கர்ஜிக்கும் சமந்தா.. எப்படி இருக்கு தி ஃபேமிலி மேன் 2?

சென்னை: தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், பல தடைகளை தாண்டி திட்டமிட்டபடி அமேசான் பிரைமில் வெளியானது.

Recommended Video

தமிழகத்தில் எதிர்ப்பு The Family man 2 ஏன் தெரியுமா? | Oneindia Tamil

மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடிப்பில் வெளியான முதல் பாகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அப்படியே முடிக்காமல் ரசிகர்களை தவிக்க விட்ட இயக்குநர்கள், முதல் எபிசோடிலேயே அதன் கிளைமேக்ஸை காட்டி விட்டனர்.

மேலும், இரண்டாவது சீசனுக்காக ஈழத் தமிழ் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது நிச்சயம் சவாலான ஒன்று தான். அதிலும் சமந்தாவின் நடிப்பு தற்போது நெட்டிசன்களின் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

கிளைமேக்ஸ் என்ன ஆச்சு

கிளைமேக்ஸ் என்ன ஆச்சு

முதல் சீசன் கிளைமேக்ஸை அப்படியே முடிக்காமல் இரண்டாவது சீசனுக்காக பல மாதங்கள் ரசிகர்கள் காக்க வைத்த நிலையில், முதல் எபிசோடில் ஆரம்பத்திலேயே இலங்கைக்கு கதை செல்ல, ரசிகர்கள் அந்த விஷ வாயு மற்றும் மிஷன் ஸுல்ஃபிகர் என்ன ஆச்சு என எதிர்பார்க்க, ஐடி வேலையில் இருக்கும் நாயகன் நினைத்து பார்க்கும் காட்சிகளாக அந்த காட்சியை சில நிமிடங்களில் முடித்துவிட்டனர்.

அரசியல் ஆட்டம்

அரசியல் ஆட்டம்

என்ன தான் நேர்மையான அதிகாரிகள் இருந்தாலும், அரசியல் ஆட்டத்திற்கு முன்பாக அவர்கள் பணியாட்களாகவே மட்டும் தான் இருப்பார்கள் என்பதை இந்த வெப் தொடர் ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் - சீனா - இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் அரசியல் மற்றும் அதன் மூலம் இந்தியாவில் நடக்கும் பாதிப்புகளை நாளிதழ்களில் வந்த செய்திகளின் மூலம் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கி உள்ளனர்.

பிரபாகரனுக்கு பதில் பாஸ்கரன்

பிரபாகரனுக்கு பதில் பாஸ்கரன்

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பாஸ்கரன் எனும் சித்தரிப்பு கதாபாத்திரமாக உருவாக்கி உள்ளனர். மைம் கோபி பாஸ்கரனாக நடித்துள்ளார். போரை விரும்பவில்லை சுதந்திரத்தை மட்டுமே விரும்புகிறேன் என ஆரம்பத்திலேயே வசனத்தை வைத்து இயக்குநர்கள் சர்ச்சைகளில் இருந்து தப்பித்துக் கொண்டனர். இந்த வெப் தொடர் குறித்து சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் ட்விட்டர் கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.

கர்ஜிக்கும் சமந்தா

கர்ஜிக்கும் சமந்தா

தமிழின துரோகியாக நடிகை சமந்தா மாறி விட்டார் என கண்டனங்கள் கிளம்பிய நிலையில், டிரைலரால் உருவான சர்ச்சைகளுக்கு வெப் தொடர் மூலம் சர்ச்சைகளுக்கு சமந்தா முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றே வெப் தொடரை பார்த்த ட்விட்டர் வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். என் தமிழனத்தை நான் காப்பேன் என கர்ஜிக்கும் சமந்தாவின் காட்சி தீயாக இருக்கிறது என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

தீ தெறிக்குது

தீ தெறிக்குது

தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் ராஜி கதாபாத்திரத்தில் அசத்தல் நடிப்பை நடிகை சமந்தா வெளிப்படுத்தி உள்ளார் என பலரும் பாராட்டி வருகின்றனர். அவரது கதாபாத்திரம் மற்றும் கதை தேர்வு தீயாக தெறிக்குது என ஏகப்பட்ட ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தப்பா காட்டல

தப்பா காட்டல

இலங்கை தமிழர்களின் போராட்டத்தை தீவிரவாத இயக்கமாக இயக்குநர்கள் சித்தரித்துள்ளதாகவும், அந்த வெப் தொடரில் சமந்தா ஏன் நடித்தார் என்றும் சர்ச்சைகள் வெடித்த நிலையில், ஈழத் தமிழர்களின் உணர்வுகளை எந்த இடத்திலும் தப்பா காட்டல என்றும் வீரத் தமிழ்ப்பெண்ணாகவே சமந்தா நடித்துள்ளார் என்றும் பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

சமந்தா ஸ்டார்ம்

செம ஃபிட்டான தோற்றத்தில் ராஜி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமந்தா, சண்டையிடும் காட்சிகள் வேற லெவலில் உள்ளதாக வீடியோ க்ளிப்களையும் ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்து சமந்தா புயலாக நடித்துள்ளார் என பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X