பிரபல நடிகரின் உடல் காட்டில் பிணமாக மீட்பு.. தலைமறைவான நண்பர்கள்.. நடந்தது என்ன?
சென்னை: நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பிரபல நடிகர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலில் பல இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாலும், நடிகரின் பெற்றோருக்கு மரணத்தில் சந்தேகம் இருப்பதாலும், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்த நிலையில், இந்த வெப் தொடர் நவம்பர் மாதம் அமேசான் பிரைமில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனோஜ் குமார், பிரியா மணி, ஜெய்தீப் ஆகியோர் நடித்துள்ள, இந்த தொடரில் ஒரு முக்கியரோலில் நடித்தவர் தான் ரோஹித் பாஸ்ஃபோர். இவரது உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்பங்கா நீர்வீழ்ச்சிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.

நடிகர் உயிரிழப்பு: நடிகர் ரோஹித் பாஸ்ஃபோர் தனது ஒன்பது சக நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது நீர்வீழ்ச்சியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணி புறக்காவல் நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின் படி, இந்த சம்பவம் பிற்பகல் 2 மணியளவில் நடந்துள்ளது. நாங்கள் மாலை 4.30 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்தோம். பின் மாலை 6.30 மணியளவில் எஸ்டிஆர்எஃப் குழு உதவியுடன் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம். ரோஹித்தின் முகம், கழுத்து என உடலின் பல இடத்தில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது. ரோஹித்தின் மறைவு பற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தோம். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
திட்டமிட்ட கொலை: நீர்வீழ்ச்சியில் இருந்த ரோஹித் தவறி விழுந்ததாக கருதப்பட்ட நிலையில், ரோஹித்தின் குடும்பத்தினர் இது கொலை என்றும், ரோஹித்தின் நான்கு நண்பர்கள் அவரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும், சில நாட்களுக்கு முன்பு பார்க்கிங் தொடர்பாக ஒரு சண்டை ஏற்பட்டது. அப்போது, அவர்கள் மூன்று பேரும், ரோஹித்தை கொலை செய்துவிடுவோம் என்கிற வகையில் மிட்டினார்கள். அதன் பிறகு தான் இவர்கள் அனைவரும் சுற்றுலா செல்ல திட்டம் போட்டனர். அப்போது கூட, ரோஹித் வரவில்லை என்று தான் சொன்னான். ஆனால், ஜிம் பயிற்சியாளர் அமர் தீப் தான் அவனை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார். இதனால், இந்த சதியில் அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாட்டினர். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது, ரஞ்சித் பாஸ்ஃபோர், அசோக் பாஸ்ஃபோர் மற்றும் தர்ம பாஸ்ஃபோர் ஆகிய மூன்று பேரும் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
சினிமா மீது ஆவர் கொண்ட நடிகர் ரோஹித் பாஸ்ஃபோர் தனது தீவிர முயற்சியால் தற்போது தான் படிப்படியாக உயர்ந்துள்ளார். இவர் ஃபேமிலி மேன் 3 ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். பேமிலி மேன் 3 படப்பிடிப்பின் போது ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் தலிப் தஹில் ஆகியோருடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து "இவ்வளவு சிறந்த அனுபவத்தைப் பெறுவது அதிர்ஷ்டம்" என்று எழுதியிருந்தார்.
இந்த தொடர் நவம்பர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில், ரோஹித் பாஸ்ஃபோர் உயிரிழந்தது பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











