Year Ender 2025: இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனத்தை வென்ற வெப் தொடர்கள்!

சென்னை: சினிமா பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது ஓடிடி தளங்கள். முன்பெல்லாம் வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக வெளியான படங்களை பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள். ஓடிடி தளங்களின் வருகையால், தினம் தினம் மனதிற்கு பிடித்த பிடித்த படங்களை, தங்களுக்கு பிடித்த மொழிகளில் பார்த்து ரசித்து வருகின்றனர். இப்படி சினிமா பிரியர்களின் மனதில் இடம் பிடித்த ஓடிடி தளங்கள், தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க விதவிதமான வெப் தொடர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற வெப்தொடர்களை பார்க்கலாம்.

சுழல் 2: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சுழல் முதல் பாகம் வெப் சீரிஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்கர் - காயத்ரி உருவான அந்த வெப் தொடரின் இரண்டாம் பாகத்திலும் நாயகன் கதிர் மற்றும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர். முதல் பாகத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் குற்றம் செய்தவரை துப்பாக்கியால் சுட்டு விடும் இடத்திலிருந்து இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக நகர்ந்து சென்றது. சுழல் 2 Amazon Prime Videoவில் பிப்ரவரி வெளியாகி வரவேற்பை பெற்றது.

Year ender 2025 web series 2025 2025

Om Kali Jai Kali: விமல் நடிப்பில் ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் மாதம் வெளியானத் தொடர் ஓம் காளி ஜெய் காளி. விலங்கு வெப் தொடருக்கு பின் விமல் நடித்த வெப் தொடர் இதுவாகும், இத்தொடரில் குவீன்ஸி, புகழ், கஞ்சா கறுப்பு, பாவ்னி ரெட்டி, கிரண், திவ்யா துரைசாமி, ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒரு கொலைக்கு பழிவாங்க ஒரு கிராமமே திரண்டு வரும் கதையை அட்டகாசமாக நகர்த்தி இருந்தார் இயக்குநர்.

ஹார்ட்ர் பீட் 2: 'ஹார்ட்ர் பீட்' வெப் தொடர் முதல் பாகத்துத் க்கு கிடைத்த வரவேற்பையடுத்துத் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. மக்களின் வரவேற்பை பெற்ற இந்தத் தொடரில் நடிகை அனுமோள், கார்த்ர் த்திக் குமார், தீபா பாலு, பாடினி குமார், யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜியோ ஹார்ட் ஸ்டாரில் மே மாதம் வெளியான இந்த வெப் தொடர் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து ஹார்ட்ர் ட்பீட் 3 விரைவில் வெளியாக உள்ளது.

தி ஃபேமிலி மேன் 3: உலக அளவில் மிகப் பிரபலமான 'தி ஃபேமிலி மேன்' தொடரின் 3-வது சீசன் ஏறக்குறைய 4 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு வெளியாகி வரவேற்பை பெற்றது. ராஜ் & டி.கே. கூட்டணியின் 'தி ஃபேமிலி மேன்' தொடரின் மூன்றாவது சீசனில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷாரிஃப் ஹாம்ஷி, சுந்தீப் கிஷன் ஆகியோர் நடித்திருந்தனர். ஏழு எபிசோடுகளை கொண்ட இந்த சீசன், சில எபிசோடுகளில் மந்தமாக சென்றாலும் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

குற்றம் புரிந்தவன்: நடிகர் பசுபதி, வித்தார்த், லட்சுமி பிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் வெப்தொடர் 'குற்றம் புரிந்தவன்'. இயக்குநர் செல்வமணி இயக்கியுள்ள இந்த வெப் தொடர், சோனிலிவ் ஓடிடி தளத்தில் இந்த மாதம் 8ந் தேதி 7 எபிசோட்டுகளாக வெளியாகி உள்ளது. ஒரு சிறுமியின் கொலையைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவிழும் மர்ம முடிச்சுகளுடன் கதை சுவாரசியமாக சென்ற இந்த தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X