முதன்முறையாக நெகட்டிவ் கேரக்டர்.. அதிரடி ஆக்ஷனில் மிரட்டிய சமந்தா.. புகழும் இயக்குனர்கள்!
சென்னை: தி ஃபேமிலி மேன் தொடரின் இரண்டாவது சீசனில் நடிகை சமந்தா ஆக்ஷன் காட்சியில் மிரட்டியுள்ளதாக இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ் உட்பட பலர் நடித்து வெளியான வெப் தொடர், தி ஃபேமிலி மேன்.
அமேசான் பிரைமில் வெளியான இந்த தொடர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இரண்டாவது சீசன்
இந்தி பட இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இந்தத் தொடரை இயக்கி இருந்தனர். இப்போது இதன் இரண்டாவது சீசன் தயாராகி உள்ளது. இதில் சமந்தா நடித்துள்ளார். இந்த தொடர் இந்த மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்நிலையில், பிப்ரவரி மாதத்துக்கு இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விதிகள் உடைப்பு
இந்நிலையில், இந்த தொடரில் நடித்தது பற்றி பேசிய நடிகை சமந்தா, 'இதில் நான் பல விதிகளை உடைத்திருக்கிறேன். புத்தம் புதிதாகப் பல விஷயங்களைப் சோதித்துப் பார்த்திருக்கிறேன். என்னை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இந்த கேரக்டர் ஆச்சரியமானதாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

நெகட்டிவ் கேரக்டர்
இதற்கிடையே இந்த தொடரில் அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் அவருக்கு அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதை படத்தின் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். சமந்தா சண்டைக் காட்சிகளில் மிரட்டினார் என்றும் அதற்காக அவர் அதிகப் பயிற்சி மேற்கொண்டார் என்றும் கூறியுள்ளனர்.

மறுபேச்சு பேசவில்லை
இதுபற்றி இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே கூறும்போது, இந்தப் படத்துக்காக சமந்தாவிடம் பேசினோம். இதில் கிளாமர் காட்சிகள் இல்லை. ஆனால், அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது என முதலில் சொன்னோம். அவர் மறுபேச்சு பேசவில்லை. நடிக்கிறேன் என்றார். அதைதான் எதிர்பார்த்தோம் என்றனர்.

நிஜமான குத்து
மேலும் அவர்கள் கூறும்போது, ஒரு காட்சியில் அவர் ஒருவரை ஓங்கி குத்த வேண்டும். நாங்கள் மானிடரை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர் நிஜமாகவே அவரை குத்தியது போல தோன்றியது. அந்தளவுக்கு ஆக்ஷன் காட்சிகள் தத்ருபமாக வந்திருக்கிறது' என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











