twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் தொன்மையான மொழி…..பரபரப்பை பற்ற வைத்த தி பேமிலி மேன் வெப் சீரிஸ்

    |

    Recommended Video

    தமிழ் தொன்மையான மொழி…..பரபரப்பை பற்ற வைத்த தி பேமிலி மேன் வெப் சீரிஸ்-வீடியோ

    சென்னை: அமேசான் ப்ரைம் சேனலில் ஒளிபரப்பான 'தி ஃபேமிலி மேன் (The Family Man) வெப் சீரிஸில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியை பாருங்கள். மிகவும் அழகான பதிவு இது, மிகவும் எதார்த்தமான காட்சி. இந்த வெப் சீரீஸில் தமிழ் பெண்ணாக நடித்திருப்பவர், தேசிய விருது பெற்ற ப்ரியாமணி. சமஸ்கிருதத்தையும் விட தமிழ் எவ்வளவு தொன்மை வாய்ந்த மொழி என்பதையும், போகிற போக்கில் எவ்வளவு சர்வசாதாரணமாக சொல்லிவிட்டுப்போகிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது ரசிக்கும் படியாக இருக்கும்.

    தமிழ் தமிழ் என்று பல பேர் மேடையில் பேசுவதுண்டு. ஆனால் உண்மையில் தமிழ் தான் தொன்மையான மொழி என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில்லை. சில மொழி ஆதிக்க மனிதர்களுக்கு மனம் வருவதில்லை.

    The Family Man Priyamani plays web series

    சில வடக்கிந்திய கலைஞர்களுக்கு தமிழின் தொன்மையும் அருமையும் எப்போதும் மிக நன்றாகத் தெரிந்தே இருக்கிறது. தமிழை தப்பு தப்பாக பேசுபவர்களும், தமிழை சும்மா வெறுமனே மொழியாக நினைப்பர்களையும் நாம் அன்றாடம் சந்திப்பது உண்டு.

    பல்வேறு வெளி நாட்டவர்கள் தான் திருக்குறளை புரட்டி போட்டு ரசிப்பார்கள். அத்தோடு பல நாடுகளின் மொழி ஆராய்ச்சியாளர்களும் எத்தனையோ ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, உலகில் ஒலி வடிவில் தோன்றிய முதல் மொழி தமிழ் மொழி தான் என்று சத்தியம் செய்கிறார்கள். அட இவ்வளவு ஏன், திருக்குறளை அனைத்து நாடுகளும் உலகப் பொதுமறை என்று எந்த பேதமும் இல்லாமல் ஒப்புக்கொள்கின்றன.

    இன்றைக்கு இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே, இந்தியா தவிர்த்து 45 நாடுகளில் பேச்சு மொழியாகவும், இன்னும் சில நாடுகளில் ஆட்சி மற்றும் அலுவலக மொழியாகவும் கோலோச்சி வருகிறது. ஆனால் வடக்கத்திய அரசியல்வாதிகளுக்கு தமிழை ஒரு மொழியாகவே மதிக்க மனம் வரவில்லை.

    The Family Man Priyamani plays web series

    தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிக்காரர்களும் தமிழை ஆராய்ச்சி செய்து தமிழின் பெருமையை உணர்ந்து தமிழை போற்றுகின்றனர். ஆனால், அதே சமயத்தில் மனதார, ஆமாம் உண்மை, தமிழ் மொழி தான் பழமையானது, முதலானது, முதன்மையானது என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். காரணம், அப்படி ஒப்புக்கொண்டுவிட்டால், ஏதோ தனது தாய் மொழிக்கு எதிராக பேசிவிட்டோமே என்று மற்றவர்கள் கூறுவார்கள் என்று நினைத்து மாற்று கருத்தை பேசி வருவார்கள்.

    அமேஸானில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கும் 'தி ஃபேமிலி மேன் (The Family Man) வெப் சீரிஸில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியை பாருங்கள். மிகவும் அழகான பதிவு இது , மிகவும் எதார்த்தமான காட்சி.

    இந்தியாவின் தேசிய மொழி என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் அது தேசிய மொழிகளில் ஒன்று என்பதையும், சமஸ்கிருதத்தையும் விட தமிழ் எவ்வளவு தொன்மை வாய்ந்த மொழி என்பதையும், போகிற போக்கில் எவ்வளவு சர்வசாதாரணமாக சொல்லிவிட்டுப்போகிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது ரசிக்கும் படியாக இருக்கும்.

    இந்தியிலும் இப்படி தைரியமாக காட்சிகள் சிலர் எடுக்கின்றனர். இந்த வெப் சீரிஸில் தமிழ் பெண்ணாக நடித்திருப்பவர், தேசிய விருது பெற்ற ப்ரியாமணி. உடன் நடித்தவர்கள் எல்லோருமே நன்கு நடிக்கக்கூடிய அனுபவம் வாய்ந்த எதார்த்த கலைஞர்கள். தமிழ் மொழி பழமையானது என்று எத்தனை பதிவுகள் வந்தாலும், ஒப்புக்கொள்ள மனம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

    English summary
    Watch an episode of ‘The Family Man’ web series on Amazon Prime Chanel. It is a very beautiful record, a very realistic scene. The Tamil woman in this web series is Priyamani who won the National Award. ‘Tamil’ is a much more important language than ‘Sanskrit’, and it will be interesting to see how common they are going to be.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X