twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தி ஃபேமிலி மேன் 2 டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது!

    |

    மும்பை : 2019ஆம் ஆண்டு தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வர இதில் சமந்தா முக்கிய வேடத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்.

    பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தற்போது ரிலீஸாக உள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ்
    டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    மிகப் பிரபலமாக

    மிகப் பிரபலமாக

    இந்தியில் மிகப் பிரபலமாக பேசப்பட்ட வெப்சீரிஸ் தி ஃபேமிலி மேன் . காட்சிக்கு காட்சி பரபரப்பை ஏற்படுத்த கூடிய மிகச் சிறந்த வெப் சீரிஸாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது. இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஸ்ரேயா தன்வந்திரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    ரிலீஸ் தேதி

    ரிலீஸ் தேதி

    முதல் பாகம் கொடுத்த வரவேற்பை அடுத்து இதன் இரண்டாம் பாகம் மிகச் சிறப்பாக உருவாகி இருக்க சில மாதங்களுக்கு முன்பே வெளியாக இருந்த இந்த வெப்சீரிஸ் சர்ச்சைகளில் சிக்கி பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்ப ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

    வில்லியாக களமிறங்குகிறார்

    வில்லியாக களமிறங்குகிறார்

    இவரை தென்னிந்தியாவை கலக்கிக் கொண்டிருந்த நடிகை சமந்தா முதல்முறையாக பாலிவுட்டில் கால் தடத்தை பதிக்க ஆரம்பமே அமர்க்களமாக வில்லியாக களமிறங்குகிறார். தீவிரவாத கும்பலுடன் இணைந்து இந்தியாவில் செயல்படும் ஸ்லீப்பர் செல் ரோலில் சமந்தா நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்திற்காக சமந்தா பல்வேறு பயிற்சிகள் எடுத்துள்ளார்.

    மே 19 தேதி

    மே 19 தேதி

    வரும் ஜூன் 11-ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் அமேசான் பிரைமில் தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் வெளியாக இருக்கும் நிலையில் தற்பொழுது இதன் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே 19ம் தேதி டிரைலர் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிறது.

    English summary
    The family man trailer release date announced.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X