அந்த மாதிரி காட்சிகள்.. வெப் சீரிஸுக்கு நடிக்க அழைத்த இயக்கம்.. விளாசித் தள்ளிய அந்த ஹீரோயின்!
சென்னை: பிரபல நடிகையை வெப்சிரீஸில் நடிப்பதற்கு அழைத்த இயக்குனரை பிரபல ஹீரோயின் விளாசித் தள்ளியுள்ளார்.
சினிமாவில் இருந்து எல்லோரும் இப்போது வெப்சிரீஸ் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி இருக்கிறார்கள்.
கேட்ட சம்பளம் கிடைத்துவிடுவதாலும் அதிக வேலை இல்லை என்பதாலும் நடிகர், நடிகைகள் சம்மதித்து விடுகிறார்கள்.

ஆபாசக் காட்சிகள்
கிரைம், ஹாரர், த்ரில்லர் தொடர்பான கதைகளை மட்டுமே வெப்சீரிஸ்கள் கொண்டிருப்பதால், அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். பெரும்பாலான வெப்சீரிஸ்களில் ஆபாசக் காட்சிகள் அநியாயத்துக்கு முக்கியத்துவம் பெறுகின்றன. முறை தவறிய காதலில் இருந்து, கள்ளக்காதல் வரை எவ்வளவு மோசமாக சித்தரிக்க முடியுமோ, அவ்வளவு வக்ரமாக காட்சிகளை வைப்பதாக புகார்கள் எழுகின்றன.

அரை நிர்வாணம்
அதிலும் பிரபல முன்னணி நடிகைகளே, ஆபாச பட ரேஞ்சுக்கு நிர்வாணமாகவோ, அரை நிர்வாணமாகவோ நடிப்பதால் இந்த வெப்சிரீஸ்கள் மேலும் பரபரப்பாகிறது. வெப்சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால் இஷ்டத்துக்கு ஆபாசமாக எடுப்பதாகச் சொல்கிறார்கள். வெப்சீரிஸ் பக்கம் ரசிகர்களை அதிகமாக இழுக்க, இதுதான் வழியாம்.

புதிய வெப்சீரிஸ்
இந்தி, ஆங்கில வெப்சீரிஸ்களில்தான் அப்படி என்றால், சமீபத்தில் வெளியாக இருந்த தமிழ் வெப்சீரிஸின் டிரைலரிலும் இப்படி சில காட்சிகள் இருந்தன. பிறகு வேறு பிரச்னை காரணமாக, அந்த சீரிஸை வெளியிடாமல் நிறுத்திவிட்டது அந்த நிறுவனம். இந்நிலையில் புதிய வெப்சீரிஸ் ஒன்றை தொடங்க இருக்கிறது பிரபலமான நிறுவனம் ஒன்று.

படுக்கையறைக் காட்சிகள்
அதில் நடிப்பதற்காக அந்த முன்னணி ஹீரோயினை நாடியிருக்கிறார், அந்த இயக்கம். கதையை கேட்ட அந்த நடிகை, நடிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்க, அதற்கு அடுத்துதான் இயக்கம் பேச்சை மெதுவாக ஆரம்பித்தாராம். அதாவது சில படுக்கையறைக் காட்சிகளில் கொஞ்சம் ஓவராகவே, நெருக்கமாக நடிக்க வேண்டும் என்றாராம்.

ஒழிக்க நினைக்கிறீங்களா?
இதைக் கேட்டதும்தான் அந்த நடிகை கடுப்பாகி விட்டாராம். எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. அதை ஒரேயடியாக ஒழிக்க நினைக்கிறீங்களா? இதுல எப்படி நான் நடிப்பேன்னு நினைச்சீங்க? என்று நடிகை கேள்விகளை கோபமாக அடுக்கிக்கொண்டே போக, இயக்கம் கப்சிப். பிறகு ஸாரி என்று மட்டும் சொல்லிவிட்டு சத்தம் போடாமல் திரும்பி விட்டதாகச் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











