மாஸானா பல ஹிட் படங்கள் கொடுத்தும் ..காணாமல் போன தமிழ் இயக்குனர்கள்!

சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களும் உருவாக காரணமாக இருப்பவர்கள் இயக்குனர்கள். கேப்டன் ஆப் தி ஷிப் என அழைக்கப்படும் இயக்குனர்கள் திரைப்படங்களில் உள்ள பல்வேறு துறைகளைப் பற்றி அறிந்திருப்பது அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது.

Recommended Video

V-CONNECT | QUBE CO-FOUNDER SENTHIL KUMAR CHAT |MEANING OF QUBE | FILMIBEAT TAMIL

அவ்வாறு திரைப்படத்தின் தலைமையை ஏற்று ஒரு திரைப்படத்தை முழுமையாக இயக்கி வெளியிடுவது இப்போதுள்ள சூழ்நிலையில் மிகப் பெரிய சவாலாக உள்ளது. அவ்வாறு பல சவால்களை சந்தித்து பல இயக்குனர்கள் பல வெற்றிப்படங்களை இயக்கி தங்களது பெயர்களை முத்திரை பதித்து வருகின்றனர்.

அவ்வாறு பல வெற்றிப் படங்களின் மூலம் தங்களது பெயர்களை வெற்றி இயக்குனர்களாக முத்திரை பதித்த தமிழ் இயக்குனர்கள் பலரும் இன்று காணாமல் போயுள்ளனர் அவர்களை பற்றி சில தகவல்களை பார்ப்போம்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

தமிழ் திரைப்படத்துறையில் தற்போதுள்ள உச்ச நட்சத்திர நடிகர்களை பெரும்பாலும் வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் தரணி. தற்பொழுது இந்திய அளவில் மிகவும் உற்று நோக்கப்படும் தமிழ் நடிகர்களான விஜய், விக்ரம், சிம்பு மற்றும் மம்முட்டி என பல முன்னணி நடிகர்களை வைத்து பல மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

நல்ல பெயர் கிடைத்தது

நல்ல பெயர் கிடைத்தது

நடிகர் விக்ரம் மிகச் சிறந்த நடிகராக இருந்தாலும் ஒரு சில படங்களை தவிர விக்ரம் நடித்த பல படங்கள் பெரும்பாலும் சுமாரான வெற்றியையும் தோல்வியை மட்டுமே தழுவிக் கொண்டு வந்தது. இந்த நிலையில் முதல் முறையாக இயக்குனர் தரணியுடன் தில் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் விக்ரமிற்கு நல்ல பெயர் கிடைத்தது.

மீண்டும் தூள்

மீண்டும் தூள்

தில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து விக்ரமின் திரைத்துறை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து, விக்ரம் ஆக்சன் ஹீரோ பட்டியலில் இணைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் தூள் திரைப்படத்தில் இணைந்து சும்மா தூள் கிளப்பினார்கள்.

மிகப்பெரிய வெற்றி

மிகப்பெரிய வெற்றி

தில், தூள் என இரண்டு மெகாஹிட் திரைப்படங்களை விக்ரமிற்கு கொடுத்த தரணி, தளபதி விஜய்யுடன் இணைந்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமான கில்லி என்ற படத்தை கொடுத்திருந்தார். அதிக வசூல் மற்றும் அதிக நாட்கள் திரையில் ஓடிய படம் என்ற சாதனையை கில்லி படம் பெற்றது. இன்றளவும் அந்த கதாபாத்திரத்தின் பெயர்கள் பேசப்பட்டு வருகிறது.

குருவி

குருவி

விஜய் மற்றும் தரணி இணைந்த முதல் படமே மெகா ஹிட்டாகி விஜய்யின் திரைப்பட வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய பின் மீண்டும் இவர்கள் இருவரும் குருவி என்ற படத்தில் இணைந்து மற்றுமொரு வெற்றியை கொடுத்தனர்.

9 ஆண்டுகளுக்கு

9 ஆண்டுகளுக்கு

இவ்வாறு வெற்றிக்கு மேல் வெற்றி கொடுத்த இயக்குனர் தரணி கடைசியாக நடிகர் சிம்புவை வைத்து 2011 ஆம் ஆண்டு ஒஸ்தி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு பின் தரணி எந்த ஒரு படங்களையும் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கவில்லை.

ஊர்களின் பெயர்கள்

ஊர்களின் பெயர்கள்

தமிழ் திரைப்படத் துறையில் பல்வேறு இயக்குனர்களும் தங்களின் படங்களுக்கு பல்வேறு விதமான தலைப்புகளை சூட்டி வந்த நிலையில், இயக்குனர் பேரரசு வித்தியாசமாக தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை படங்களின் தலைப்புகளாக வைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வந்தார்.

முன்னணி நடிகர்கள

முன்னணி நடிகர்கள

இவ்வாறு ஊர்களின் பெயர்களை மட்டுமே தனது படங்களின் தலைப்பாக பயன்படுத்தி வந்த இயக்குனர் பேரரசு விஜய், அஜித், விஜயகாந்த், அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

விஜய்யின் போட்டியாக

விஜய்யின் போட்டியாக

தளபதி விஜய்யை வைத்து இவர் இயக்கிய திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வசூலை வாரி குவித்த நிலையில், விஜய்யின் கலையுலக போட்டியாக கருதப்படும் அஜித்தை வைத்து உடனடியாக திருப்பதி என்ற தனது மூன்றாவது படத்தையும் இயக்கி மூன்றாவது படத்திலும் வெற்றி கண்டு தமிழ் திரைப்படத்துறையில் தொடர் வெற்றி இயக்குனராகவும் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

இந்த தொடர் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜயகாந்தை வைத்து தர்மபுரி என்ற பெயரிலும், நடிகர் பரத்தை வைத்து பழனி என்ற பெயரிலும் படங்களை இயக்கி அதிலும் வெற்றி கண்டார். திரைப்படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் தான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் தோன்றி ஒரு வசனத்தையாவது சொல்லி விட்டு செல்வது இவரது வழக்கம். இவ்வாறு பல முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே இயக்கி வந்த பேரரசு கடந்த பல ஆண்டுகளாக எந்த ஒரு படங்களையும் இயக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X