‘மாயோன்‘ இயக்குநருக்கு தங்கசங்கிலி பரிசு.. கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய படக்குழு!
சென்னை : அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பதை மையக் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'மாயோன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்றை பெற்றுள்ளது.
Recommended Video
சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் உருவான இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் கிஷோர் இப்படத்தை இயக்கி உள்ளார்.
கடந்த வாரம் வெளியானத் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து படக்குழு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

மாயோன்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதையலைத் தேடும் படம், திரில்லர் ஜானரில் மாயோன் திரைப்படம் உருவாகியுள்ளது. கடவுளையும், விஞ்ஞானத்தையும் இணைத்து இரு தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் கிஷோர். ஒரு கல்வெட்டை பற்றி ஆராய தொல்லியல் குழு புதுக்கோட்டை செல்கிறது.

ரகசிய அறையில் புதையல்
அப்படி அவர்கள் ஆராய்ச்சி செய்யும் போது கோவிலுக்குள் இருக்கும் ரகசிய அறையில் புதையல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், கோவிலில் அமானுஷிய சக்தி இருப்பதால் கோவிலுக்கும் இருக்கும் ரகசிய அறைக்கு செல்ல முடியவில்லை. அந்த குழு புதையலை எடுத்தார்களா? இல்லையா என்பது தான் அழகாக சுவாரசியமான கதையாக நகர்த்தி இருக்கிறார் இயக்குநர்.

இயக்குநருக்கு பரிசு
கடந்த வாரம் வெளியான மயோன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து படக்குழு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர். அப்போது மாயோன் திரைப்படத்தை யாரும் எளிதில் யூகிக்க முடியாத காட்சிகளை அமைத்து படத்தை வெற்றிப்படமாக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு நடிகர் சிபிராஜ் தங்க சங்கலியை பரிசாக அளித்தார்.

தெலுங்கில்
தமிழகத்தில் ரசிகர்களின் பெரும் வரவேற்பையும், ஆதரவையும் பெற்ற 'மாயோன்' திரைப்படம் ஜூலை ஏழாம் தேதியன்று தெலுங்கு மொழியில், 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இதுதொடர்பாக ஹைதராபாத்தில் ஜூலை 1ஆம் தேதி அன்று பிரம்மாண்டமான அளவில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











