கெத்துகாட்ட வருது கேஜிஎஃப் சாப்டர் 2… டப்பிங் பணியை தொடங்கிய படக்குழு!
சென்னை : கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்ததை அடுத்த கேஜிஎஃப் சாப்டர்2 படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.
இதனால் கேஜிஎஃப் பாகம் இரண்டு திட்டமிட்டபடி திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்தைப்போலவே இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.

மிகப்பெரிய வெற்றி
2008ம் ஆண்டு வெளியாகி இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் தான் கேஜிஎஃப். இப்படத்தில் யாஷ் ஒற்றையாக நின்று அனைவரின் கவனத்தையும் தன் வசப்படுத்தி இருப்பார். இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் சும்மா மிரளவைக்கும் வகையில் இருக்கும். இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை என்று அனைவரையும் உச்சுகொட்டவைத்தது இந்த திரைப்படம்.

உருவாகி வருகிறது
படம் தான் மாஸ் அண்டு கிளாஸ்னா கருவினில் என்னை சுமந்து... வீரா வீரா... என்ற பாட்டு மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. இப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்ததை அடுத்து, கேஜிஎஃப்2 தயாராகி வருகிறது. இதில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

100 மில்லியன் பார்வையாளர்கள்
கேஜிஎஃப்2 படத்தின் டீசரை யாஷின் பிறந்த நாள் அன்று படக்குழு வெளியிட்டது. அந்த டீசரில் யாஷ் செமயாக கெத்து காட்டி இருந்தார். டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 78 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இப்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

டப்பிங் பணி தொடக்கம்
இந்நிலையில் கொரோனாவின் 2வது அலையால் தடைபட்டு இருந்த படத்தின் வேலைகள் தற்போது மெல்ல தொடங்கியுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாளவிகா அவினாஷ்,டப்பிங் பணியை தொடங்கிவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் கேஜிஎஃப்2 திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











