twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘தேவர் மகன்’ 30 ஆண்டுகள்..சிவாஜிக்கு மரியாதை, வடிவேலுக்கு பிரேக்..மகளுடன் கமல் வெளியிட்ட படம்

    |

    தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய படங்களில் தேவர் மகன் திரைப்படமும் ஒன்று.

    கமல்ஹாசன் துணிச்சலாக இப்படத்தை எடுத்து வெளியிட்டார். அதில் கல்வி முக்கியம் பழைய விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள் என்பதுதான் மெசேஜ்.

    முதல் மரியாதைக்கு முன் சிவாஜி கணேசனுக்கு வலுவான பாத்திரமும், வடிவேலுக்கு பிரேக் கிடைத்த படம் என்றால் அது தேவர் மகன் தான்.

    'தேசிய தலைவர்' பட விழாவில் பரபரப்பு: நவமணியை அடிக்க பாய்ந்த நடிகர் எஸ்எஸ்ஆர் மகன் கண்ணன்!'தேசிய தலைவர்' பட விழாவில் பரபரப்பு: நவமணியை அடிக்க பாய்ந்த நடிகர் எஸ்எஸ்ஆர் மகன் கண்ணன்!

     மண்ணின் மணம் கூறும் தேவர் மகன்

    மண்ணின் மணம் கூறும் தேவர் மகன்

    தற்போது வணிகச் சூழலில் சிக்கி விக்ரம் போன்ற வன்முறையை ஆதரிக்கும் படங்களை எடுத்தாலும் உலக நாயகன் கமல்ஹாசன் துணிச்சலாக பல படங்களை எடுத்துள்ளார். அதில் அவரது சமூக அக்கறையை பாராட்டாமல் இருக்கவே முடியாது. அதனால் அவர் இழந்த பொருளாதார இழப்பு அதிகம் என்றாலும் அவர் பெற்ற பேரை அந்த காலத்தில் பணம் பார்த்த நடிகர்களுக்கு கிடைக்காது. ஹே ராம் படம் அவரது அக்கறைக்கு முக்கிய சாட்சி. விருமாண்டி, தேவர் மகன் இரண்டுமே கிட்டதட்ட ஒரே அக்கறை பார்வையில் எடுக்கப்பட்ட படம் எனலாம்.

     புதுமைகளின் நாயகன் கமலின் பேர் சொல்லும் படங்கள்

    புதுமைகளின் நாயகன் கமலின் பேர் சொல்லும் படங்கள்

    திரையுலகில் புதுமைகளை முதலில் அறிமுகப்படுத்திய பெருமை கமல்ஹாசனுக்கு எப்போதும் முதலிடம் உண்டு. அதில் பல படங்களை சொல்லலாம். 100 வது படமாக துணிச்சலாக பார்வையற்ற இளைஞராக நடித்திருப்பார். பேசும்படம் என்கிற பேசா மவுனப்படத்தில் கலக்கியிருப்பார். குணா, தேவர் மகன், பள்ளிக்குழந்தை கடத்தல், விபச்சார விடுதிகள், ஒருகுடும்பம் பாதிக்கப்படுவதை மகாநதியில் பார்க்கலாம். கல்லூரி வாழ்க்கை போதைப்பொருள் கலாச்சாரம் பற்றி நம்மவர், யதார்த்த போலீஸ் படமான குருதிப்புனல், ஹாலிவுட் படத்தை தழுவி முழுமையான பெண் வேடத்தில் அவ்வை சண்முகி, நாட்டுப்பிரிவினை நேரத்தில் நடந்ததை பதிவு செய்யும் அவ்வை சண்முகி, மனச்சிதைவு நோயை விளக்கும் ஆளவந்தான், மனிதம் பேசிய அன்பே சிவம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

     கமல் துணிச்சலாக எடுத்த மெசேஜ் படம் தேவர் மகன்

    கமல் துணிச்சலாக எடுத்த மெசேஜ் படம் தேவர் மகன்

    சில படங்களை கமல்ஹாசன் துணிந்து எடுத்தார்.அதில் வைக்கப்பட்ட வசனங்களை இன்று வைத்தால் படமே வெளியே வராது எனும் அளவுக்கு இருக்கும். சமுதாய கருத்துகளை அப்பட்டமாக வெளிப்படுத்திய படம் தேவர்மகன். உள்ளூரில் வசிக்கும் ஊர் பெரியவர் சிவாஜி கணேசன், அவரது பங்காளி காகா ராதாகிருஷ்ணன். இவரின் மகன்கள் நாசர், கமல்ஹாசன். வெளிநாட்டில் படித்துவிட்டு ஊருக்கு திரும்பும் கமல்ஹாசன் காதலியையும் உடன் அழைத்து வருவார். ஊரில் உள்ள சிக்கல்களை மகனுக்கு ஆங்காங்கே விளக்கிச் சொல்வார் சிவாஜி கணேசன். ஆனாலும் கமல் கேட்கமாட்டார். படிக்காத நாசர் பழைய பகையுடனேயே அனைத்தையும் அணுகுவார்.

     வடிவேலுவிற்கு வாழ்வு தந்த தேவர் மகன்

    வடிவேலுவிற்கு வாழ்வு தந்த தேவர் மகன்

    கமலின் காதலி விரும்புகிறார் என்பதற்காககோயில் கதவை திறக்கும் வடிவேல் கை வெட்டப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் காட்சியில் கமல் ஆவேசப்படுவதும், சிவாஜி அடக்கும் காட்சியும் சிறப்பாக இருக்கும். இந்தப்படம் வடிவேலுவை மீண்டும் மக்களுக்கு அறிமுகப்படுத்திய படம். ஊருக்கே திரும்பி போகிறேன் என கமல் முடிவெடுப்பதும் அதை தடுக்க சிவாஜி பேசும் வசனமும் படத்தின் ஹைலைட். இந்தப்படத்தில் குலப்பகையை வளர்ப்பதில் தான் கவனம் செலுத்துகிறீர்கள் என கமல் எவ்வளவோ நாசரிடம் கெஞ்சுவார். ஆனால் கடைசியில் கமல் கையால் நாசர் வெட்டுப்பட்டு உயிரிழக்கும்போது ஐயோ கடைசியில் என்னையும் அரிவாள தூக்க வச்சிட்டீங்களேடான்னு கமல் அழும் காட்சி அற்புதம்.

     அற்புதமான திருப்புமுனை கதை

    அற்புதமான திருப்புமுனை கதை

    தேவர் மகனில் சிவாஜி கணேசன் வாழ்ந்திருப்பார். கமல் கவுதமி இடையே நடக்கும் சின்ன சின்ன பரிமாற்றங்களை கண்ணாலேயே அளப்பது ஆகட்டும், பஞ்சாயத்தில் கமல்ஹாசனை அடக்குவதாகட்டும், விதை நான் போட்டது, ஆனால் அதில் எனக்கென்ன பெருமை. நாம ஊருக்காக வாழணும் என்று கமலிடம் வாதம் செய்யும் காட்சியிலும் சிவாஜி கணேசன் பற்றி புதிதாக எழுத வார்த்தைகள் ஏது. தந்தைக்கு அடங்கிய மகன் ஆனால் வம்புதும்புக்கு பயப்படாத கமல் கடைசியில் தந்தை மறைவுக்குப்பின் ஊர் நன்மைக்காக காதலை துறந்து ரேவதியை மணப்பது படத்தில் திருப்புமுனை.

     5 தேசிய விருதுகளை அள்ளிய தேவர் மகன்

    5 தேசிய விருதுகளை அள்ளிய தேவர் மகன்

    ஒருவாரத்தில் எழுதிய கதையா இது, நம்புங்கள் ஒருவாரத்தில் எழுதி முடித்தாராம் கமல் இந்தக்கதையை. சிவாஜி கணேசன் தேசிய விருதே பெற்றதில்லை. ஆனால் அவருக்கு தேவர் மகனில் சிறப்பு விருது கிடைத்தது. நடிப்புலக பல்கலைகழகத்திற்கு இந்திய அரசு இதுவரை சிறந்த நடிகர் பட்டம் கொடுக்க வெட்கப்பட்டு ஒருவேளை கொடுக்காமலேயே விட்டதோ என்னவோ. இந்தப்படம் மூலம் சிறப்பு விருது அவருக்கு வழங்கப்பட்டது. தேவர் மகன் படம் 5 தேசிய விருதுகளை வென்றது. சிறந்தப்படம், சிறந்த துணை நடிகை ரேவதி, சிறப்பு விருது சிவாஜி, சிறந்த பாடகி எஸ்.ஜானகி, சிறந்த ஒலி அமைப்பு ஆகிய 5 விருதுகள் கிடைத்தது.

     ஆஸ்கர் விருதுக்கு சென்ற தேவர் மகன்

    ஆஸ்கர் விருதுக்கு சென்ற தேவர் மகன்

    தமிழ் திரைப்படங்களில் சிவாஜி கணேசன் நடித்த தெய்வமகன் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் பின்னர் பலபடங்கள் பரிந்துரைக்கப்பட்டது அதில் பெரும்பாலான படங்கள் கமல்ஹாசன் நடித்தது. அதில் தேவர் மகன் படமும் ஒன்று. அப்போது ஆஸ்கர் விருது போட்டியிலேயே இல்லாத தமிழ் படங்கள் பற்றி கமல்ஹாசன் சொன்னது ஆஸ்கர் விருது ஆங்கிலேயர்கள் ஆங்கிலேயர்களுக்காக ஆங்கிலப்படங்களுக்காக கொடுக்கப்படும் விருது அதுபற்றி கவலைப்படக்கூடாது என்பதே. அது இப்போதுவரை உண்மைதான் என்பதை சமீபத்திய படங்களின் நிராகரிப்பே தெளிவாக்குகிறது.

    கமல் வெளியிட்ட வித்தியாசமான டச்சிங் படம்

    தேவர் மகன் வந்து 30 ஆண்டுகள் ஆனாலும் அந்தப்படத்தின் இனிமையான பாடல்கள் இன்றும் நம் மனதோடு உறவாடிக்கொண்டுத்தான் இருக்கிறது. சாந்துப்பொட்டு பாடலில் எஸ்.பி.பியின் குரலும், அந்தக்குரலுக்கு ஏற்ப கமலின் கம்புச் சண்டையும், இஞ்சி இடுப்பழகி பாடலில் ஜானகியின் குழைவும், போற்றிப்பாடடி பெண்ணே பாடலில் உள்ள கம்பீரமும் இன்னும் பல பாடல்கள் அனைவராலும் அப்போது ரசிக்கப்பட்டது. தற்போது படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்த நிலையில் தந்தையின் பின் பணிவுடன் நிற்கும் மகனாக மிகப்பிரபலமான தேவர் மகன் ஸ்டில்லை பிரதிபலிக்கும் வகையில் கமல் அமர்ந்திருக்க மகள் அக்‌ஷரா ஹாசன் நிற்கும்புகைப்படத்தை கமல் வெளியிட்டுள்ளார்.

    English summary
    Devar Magan is one of the movies that created a stir in Tamil Nadu. Kamal Haasan bravely released the film. The message is that education is important and don't focus on old things. Devar Magan was the film that gave Sivaji Ganesan a strong role and Vadivel's break before the first honor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X