twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாமானியர்களை பதற வைத்த கொரோனா.. பிழைப்பின்றி தவிக்கும் திரைப்பட தொழிலாளர்கள்!

    |

    சென்னை : சினிமாவை நம்பி பிழைப்பு நடத்தும் தினக்கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில். இதுவரை உலகம் முழுவதும் 6610 பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

    இந்தியாவில் இந்த நோய்க்கு இதுவரை 3 பேர் பழியாகி உள்ளார்கள். இந்திய அரசு கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

     மக்கள் கூடுவதை தடுக்க கோரிக்கை

    மக்கள் கூடுவதை தடுக்க கோரிக்கை

    தமிழக அரசு மக்கள் அதிகம் கூடும், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், கோவில்கள், கிளப்புகள் என அனைத்து வகையான இடங்களையும் வரும் மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் , பல இடங்களில் ஆள் நடமாட்டம் இன்றி ஏதோ ஒரு வித அமைதி நிலவி வருகிறது. இந்த அமைதி கொரோனா பயத்தை மேலும் பயத்தை அதிகப்படுத்தியுள்ளது.

     சாமானியர்களின் பதற்றம்

    சாமானியர்களின் பதற்றம்

    வெள்ளம், மழை, இயற்கை சீற்றம் என எது வந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது சாமானியர்கள் தான்.. அதை மீண்டும் நிரூபித்துள்ளது இந்த கொரோனா. அடுத்த வேளை உணவுக்கா, அடுத்த நாளில் வேலைக்காக ஓடி ஒடி உழைக்கும் சாமானியர்கள் இந்த கொரோனாவில் பிடியில் சிக்கி உள்ளனர். கொரோனா தாக்கிவிடுமோ என்ற பயத்தை விட இந்த பிரச்சினையை சமாளிப்பதிலே அதிக பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

     தினக்கூலி நிலை என்ன

    தினக்கூலி நிலை என்ன

    தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் 19 தேதியில் இருந்து 31ந் தேதி வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், சினிமாத்துறையை பெரிதும் நம்பி இருக்கும், லைட்மேன்கள், துணை நடிகர்கள், கூட்டத்தில் நிற்பவர்கள் , சமையல்காரர்கள், டீ காபி கொடுப்பவர்கள், செட் வேலையாட்கள், கலை இயக்குனர் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமாவையே பெருதும் நம்பி வாழும் தினக்கூலிகளின் நிலை என்னவாகும் என்று புரியவில்லை.

     தெரியாமல் திகைப்பு

    தெரியாமல் திகைப்பு

    சினிமா துறையில் தான் தினக்கூலிகள் அதிகம். சினிமாவையை நம்பி வாழும் இவர்களின் குடும்பங்களின் நிலையை நினைக்கும் போது வருத்தம் ஏற்படுகிறது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் நல்ல விஷயம் தான் என்றாலும் இது பலரின் பொருளாதாரத்தையும், வாழ்வாதரத்தையும் அதலபாதளத்தில் தள்ளி உள்ளது. அடுத்த 13 நாளைக்குள் இந்த பிரச்சினை தீர்த்து விடுமா இல்லை தொடருமா என்ற அச்சம் கொரோனாவை விட மிகவும் வேகமாக அவர்களை தொற்றிக்கொண்டுள்ளது.

    English summary
    Corona virus : The film industry has been affected by the shooting cancel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X