படம் சரியாக ஓடவில்லை.. கடன் கழுத்தை நெறிக்கிறது.. சாகப்போறேன் கதறி அழுத நடிகர்!
சென்னை: படம் சரியாக ஓடாததால் கடல் தொல்லையால் சாகப்போகிறேன் என கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
LVS Entertainment என்ற நிறுவனத்தின் மூலம் கதை , திரைக்கதை வசனத்துடன் பூ போன்ற காதல் என்ற படத்தை சொந்தமாக இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

காதல் கதை அம்சம் கொண்ட அந்த படம் கடந்த வாரம் வெளியானது. படம் சரியாக ஓடாததால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் தற்போது மாயமாகி உள்ளார்.
நடிகர் சுரேஷ்: கிருஷ்ணகிரியைச் சேர்ந்த, சுரேஷ் சினிமா மீது இருந்த ஆசையால் பூ போன்ற காதல் படத்தை தனது மனைவி பெயரில் தயாரித்தும் இருந்தார். கடந்த வாரம் வெளியான இந்த படம் சரியாக ஓடாததால், மன வேதனையில் இருந்த சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டை விட்டுட் வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வராததால், குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

கடன் தொல்லை: இதையடுத்து, சுரேஷ் கதறி அழுதபடி இருக்கும் வீடியோவை பெற்றோருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளார். அதில்,எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள், இந்த படத்தை முடிப்பதற்காக நான் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது. இந்த படத்தை நம்பித்தான் நான் கடன் வாங்கினேன், ஆனால், 20 டிக்கெட் கூட விற்கவில்லை. இப்படியே போனால் கண்டிப்பாக என்னால் உயிர்வாழ முடியாது. எனக்கு என்ன பண்றது என தெரியவில்லை. நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளேன். நிறைய பேர் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.
சாகப்போகிறேன்: நாளைக்கு நான் கண்டிப்பாக உயிரோடு இருக்கமாட்டேன், இந்த வீடியோவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி எனக்கு உதவி செய்ய வேண்டும். இதன் மூலம் நிறைய பேர் என் படத்தை பார்ப்பார்கள் என அந்த வீடியோவில் கண்ணீர் மல்க பேசி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, மாயமான சுரேஷை ரசிகர்கள் தேடிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











