வணங்கான் படப்பிடிப்புக்காக 200 அடி கிணறு.. தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் பாலா!

சென்னை: இயக்குநர் பாலா இயக்கி வரும் வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இயக்குநர் பாலாவும், நடிகர் சூர்யாவும் நீண்ட ஆண்டுகளுக்கு பின் வணங்கான் படத்தில் இணைந்தனர். இயக்குநர் பாலாவின் பிறந்தநாள். அன்று வணங்கான் படத்தின் டைட்டில் லுக் வெளியானது.

The final shoot of director Balas Vanangaan is going to take place in Thiruvannamalai

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக நடிகர் சூரியா அவர்கள் வணங்கான் திரைப்படத்தில் இருந்து விலகினார்.

இயக்குநர் பாலா: வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியதை அடுத்து, நடிகர் அருண் விஜய் அவர்கள் வணங்கான் திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்பொழுது வணங்கான் படத்தில் நடித்துள்ளார். நடிகர் அருண்விஜய்யை பாலா படாதபாடுப்படுத்திய போதும், அருண்விஜய் அனைத்தையும் சமாளித்து முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார்.

அருண் விஜய்: அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், ​​ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, மிஸ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்தப் படத்திற்கு ஆக்‌ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார்.

வணங்கான் படப்பிடிப்பு: இந்நிலையில், வணங்கான் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கயுள்ளது. சென்னையில் படப்பிடிப்பு முடிந்ததும், திருவண்ணாமலையில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. திருவண்ணாமலையில் நடைபெற உள்ள படப்பிடிப்புக்காக, பிரம்மாண்ட கிணறு ஒன்று தோண்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

The final shoot of director Balas Vanangaan is going to take place in Thiruvannamalai

200 அடி கிணறு: சுமார் 200 அடி ஆழம் கொண்ட இந்த கிணறில் தான் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பாலா எப்போதுமே விவகாரமாகத்தான் சிந்திப்பார் என்பது தெரியும் இருந்தாலும், 200 கிணற்றில் அப்படி என்ன செய்யப்போகிறார் என கேட்டு வருகின்றனர்.

மேலும் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் வெறித்தனமாக உழைத்து வருகிறார் இயக்குநர் பாலா. இந்த படத்தில் ஆர்யாவும், விஷாலும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X