நான் உங்க வீட்டுப் பிள்ளை... எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் ஆர்ப்பாட்டமாக என்ட்ரியாகிறார் அரவிந்த் சாமி
சென்னை: எம்.ஜி.ஆரின் பிறந்த நாளன்று 'தலைவி' படத்தின் அரவிந்த் சாமி லுக், பாடலுடன் வெளியாக இருக்கிறது.
இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்
வாழ்க்கைக் கதையை படமாக்கி வருகிறார். இந்தி நடிகை கங்கனா ரனவத், ஜெயலலிதாவாக
நடிக்கிறார். இவர் தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்தவர்.
Recommended Video
அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர். ஆகவும் பிரகாஷ்ராஜ் கருணாநிதியாகவும் நடிக்கின்றனர்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக, பிரியாமணி நடிக்கிறார்.

ஆர்.எம்.வீரப்பன்
சோபன் பாபுவாக, பிரபல தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிப்பதாகக்
கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனாக, சமுத்திரக்கனி நடிக்கிறார்.

விஷ்ணுவர்தன் இந்துரி
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில்
உருவாகிறது. படத்தை விப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்துரி, சைலேஷ் ஆர்.சிங்
ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

பர்ஸ்ட் லுக்
படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்துவருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில
மாதங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஜெயலலிதா- எம்ஜிஆர்
இந்நிலையில், இந்தப் படத்தில் ஜெயலலிதா- எம்ஜிஆர் சேர்ந்திருப்பது போன்ற பர்ஸ்ட் லுக்
போஸ்டரை படக்குழு வெளியிட உள்ளது. எம்.ஜி.ஆர் பிறந்த நாளான வரும் 17 ஆம் தேதி, இந்த போஸ்டர் வெளியாக இருக்கிறது.

உங்கள் வீட்டுப் பிள்ளை
படத்தில், 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை... இது ஊரறிந்த உண்மை' என்ற எம்.ஜி.ஆர் பாடலுக்கு அதே காஸ்ட்யூமில் நடனம் ஆடியிருக்கிறார், எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த் சாமி. அந்த பாடல் டீசரும் வரும் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











