'தலைவி'யின் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா பரபரப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடி... எப்போ ரிலீஸ் தெரியுமா?

By

சென்னை: தலைவி படத்தின், 'ஜெயலலிதா - எம்.ஜி.ஆர்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடியாகியுள்ளது.

இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை படமாக்கி வருகிறார். இந்தி நடிகை கங்கனா ரனவத், ஜெயலலிதாவாக நடிக்கிறார். இவர் தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்தவர்.

Recommended Video

Queen web series Tamil | Reel & Real Characters | Gautam Vasedev Menon

அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர். ஆகவும் பிரகாஷ்ராஜ் கருணாநிதியாகவும் நடிக்கின்றனர். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக பிரியாமணி நடிப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

சோபன் பாபுவாக, பிரபல தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனாக, சமுத்திரக்கனி நடிக்கிறார்.

3 மொழிகளில்

3 மொழிகளில்

ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. படத்தை விப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்துரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

பர்ஸ்ட் லுக்

பர்ஸ்ட் லுக்

படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்துவருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஜெயலலிதா- எம்ஜிஆர்

ஜெயலலிதா- எம்ஜிஆர்

இந்நிலையில், இந்தப் படத்தில் ஜெயலலிதா- எம்ஜிஆர் சேர்ந்திருப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட உள்ளது. வரும் 17 ஆம் தேதி, இந்த போஸ்டர் வெளியாகும் என்று தெரிகிறது. அதாவது, கங்கனா-அரவிந்த்சாமி சேர்ந்து இருக்கும் தோற்றம் முதன்முறையாக வெளியாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X