அட அப்படியே இருக்காரே... 'தலைவி'யின் எம்.ஜி.ஆர் லுக் வெளியானது... அரவிந்த் சாமி ஆச்சரியம்
சென்னை: தலைவி படத்தின், 'எம்.ஜி.ஆர்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் அரவிந்த் சாமி அச்சு அசலாக, எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video
இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை படமாக்கி வருகிறார்.
இந்தி நடிகை கங்கனா ரனவத், ஜெயலலிதாவாக நடிக்கிறார். இவர் தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்தவர்.

எம்.ஜி.ஆர்.
அரவிந்த் சாமி, எம்.ஜி.ஆர். ஆகவும் பிரகாஷ்ராஜ் கருணாநிதியாகவும் நடிக்கின்றனர். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக, பிரியாமணி நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ஆர்.எம்.வீரப்பனாக
சோபன் பாபுவாக, பிரபல ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனாக, சமுத்திரக்கனி நடிக்கிறார்.

3 மொழிகளில்
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. படத்தை விப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்துரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

பர்ஸ்ட் லுக்
படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்துவருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது.

அப்படியே
இந்நிலையில், இந்தப் படத்தில் 'எம்ஜிஆர் லுக்' போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. எம்.ஜி.ஆர்.பிறந்த நாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரவிந்த் சாமி, அப்படியே எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஸ்பெஷல் டீசர் ஒன்றையும் படக்குழு இன்று வெளியிட இருக்கிறது.


Click it and Unblock the Notifications











